ETV Bharat / bharat

Ambedkar Jayanthi : குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை! - Ambedkar 125 feet statue

அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Ambedkar Jayanthi
Ambedkar Jayanthi
author img

By

Published : Apr 14, 2023, 10:11 AM IST

Updated : Apr 14, 2023, 1:00 PM IST

டெல்லி : இந்திய அரசியலமைப்பின் தந்தை எனப் போற்றப்படும் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. சமூக சீர்திருத்தவாதி, பொருளாதார வல்லுநர், சட்ட நிபுணர் என பன்முகத் தன்மை கொண்ட பீமாராவ் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தன் ட்விட்டர் பக்கத்தில், இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாபா சாகேப் பீமா ராவ் ராம்ஜி அம்பேத்கரின் 132வது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து குடி மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ட்வீட் செய்து உள்ளார்.

அறிவு மற்றும் மேதைத்துவத்தின் அடையாளமாக விளங்கும் அம்பேத்கர், கல்வியாளர், சட்ட நிபுணர், பொருளாதார வல்லுநர், அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி, தேச நலன் காக்க கல்வியை பரப்பும் குணம் கொண்டவர், சாதகமற்ற சூழலிலும் நாட்டுக்காக உழைக்கும் எண்ணம் உடையவர் உள்ளிட்ட பன்முகத் திறன்களை கொண்டு இருந்ததாக குடியரசு தலைவர் பதிவிட்டு உள்ளார்.

தாழ்த்தப்பட்ட மக்களை சமூகத்தின் உச்சிக்கு கொண்டு வருவதற்கான போராட்டம், அவர்களுக்கு கல்வி உள்ளிட்டவைகளை வழங்குவதையே அம்பேத்கர் தன் வாழ்நாள் மந்திரமாக கொண்டு இருந்தார் என்றும் சட்டத்தின் ஆட்சி மற்றும் சமூக, பொருளாதார சமத்துவத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவை இந்தியா ஜனநாயகத்தின் முதுகெலும்பு என்பதில் அம்பேத்கர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு இருந்ததாக தன் ட்விட்டர் பக்கத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்து உள்ளார்.

சமுத்துவம், வளமான நாடு மற்றும் சமூகம் ஆகிய கருத்துகளை கொண்ட அம்பேத்கரின் லட்சியம் மற்றும் வாழ்க்கையின் மதிப்புகளை நாமும் ஏற்று உறுதி மொழி எடுப்போம் என தன் ட்விட்டர் பக்கத்தில் திரவுபதி முர்மு பதிவிட்டு உள்ளார்.

  • I extend my heartiest greetings and best wishes to all fellow citizens on the occasion of the birth anniversary of the architect of our Constitution, Babasaheb Bhimrao Ramji Ambedkar. pic.twitter.com/gQDjMxPGrL

    — President of India (@rashtrapatibhvn) April 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மற்றும் சுரண்டப்படும் பிரிவினருக்கு அதிகாரம் அளிப்பதற்காக அம்பேத்கர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். மேலும் அம்பேத்கரின் வாழ்க்கை குறித்த தனது முந்தைய கருத்துகளின் ஆடியோ பதிவுகளை தன் ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார்.

தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "அம்பேத்கரின் மகத்தான பங்களிப்பை அவரது ஜெயந்தி நாளில் நினைவு கூறுவதாகவும், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி ஆகிய ஜனநாயகக் கொள்கைகளுக்காக பாடுபட்ட இந்திய அரசியலமைப்பின் சிற்பி என அனைவராலும் மதிக்கப்படுபவர் அம்பேத்கர் என பதிவிட்டு உள்ளார்.

  • VIDEO | President Droupadi Murmu and Prime Minister Modi pay tributes to Babasaheb Bhim Rao Ambedkar on the occasion of his 132nd birth anniversary today. pic.twitter.com/3JuqXM64ip

    — Press Trust of India (@PTI_News) April 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர் நாடாளுமன்ற கட்டடத்தின் புல்வெளியில் வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க : தமிழ் கலாசாரம் ஆதியும் அந்தமும் அற்ற நிலையாக விளங்குகிறது - பிரதமர் மோடி!

Last Updated : Apr 14, 2023, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.