ஆசியாவின் மிகப் பெரிய விமான கண்காட்சிக்கான 13ஆவது ‘ஏரோ இந்தியா-21’ விமான கண்காட்சி, கர்நாடகா மாநிலம் எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில், பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக விதான சவுதாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “இதுவரை நடைபெற்ற ஏரோ இந்தியா நிகழ்வுகளுக்கு பெரும் சாட்சியாக பெங்களூரு இருந்துள்ளது. ஏரோ இந்தியாவை நடத்துவதில் பெங்களூரு நிறைய அனுபவங்களைக் கண்டுள்ளது.
![Precautions and safety measures will be taken in Aero India 2021: Defence minister Rajanath Singh](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10254392_rajnath.jpg)
கோவிட் -19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் இம்முறை நடைபெறவிருக்கும் 13ஆவது ‘ஏரோ இந்தியா-21’ விமான கண்காட்சி வெற்றிகரமான நிகழ்வாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். விண்வெளி, பாதுகாப்பு உற்பத்தி துறையில் உலகின் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. அந்த இடத்தை மீண்டும் உறுதிப்படுத்தும்” என்றார்.
இந்த ஊடகச் சந்திப்பின்போது, கர்நாடக முதலமைச்சர் பி.எஸ் எடியூரப்பா, விமானப்படை அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஏரோ இந்தியா-21 கண்காட்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கொள்கைகள், நடவடிக்கைகள், உள்நாட்டு தயாரிப்பு விமானங்கள், இலகு வானூர்திகள் (ஹெலிகாப்டர்கள்) பற்றிய தகவல்களும் இடம் பெறும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 16.5 லட்சம் கோவாக்சின் டோஸ்களை இலவசமாக வழங்கியுள்ள பாரத் பயோடெக்!