ETV Bharat / bharat

பிகாரில் 3,000 கி.மீ., பாத யாத்திரை- பிரசாந்த் கிஷோர் அறிவிப்பு!

பிகார் மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்குகின்றனர். தற்போது தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை. பிகாரில் ஆட்சி 3 ஆயிரம் கிலோ மீட்டர் பாத யாத்திரை தொடங்குவேன் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Prashant Kishor
Prashant Kishor
author img

By

Published : May 5, 2022, 8:05 PM IST

பாட்னா: பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என்ற தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று (மே5) பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “காந்தி ஜெயந்தி (அக்.2) தினத்தில் காந்தி ஆசிரமத்தில் இருந்து பாத யாத்திரை தொடங்கப்படும்” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “அடுத்த 3 முதல் 4 மாதங்களில், 'ஜன் சூராஜ்' (நல்ல நிர்வாகம்) என்ற எண்ணத்தை வலியுறுத்தி, பிகாரின் முக்கிய நபர்களை நான் சந்திப்பேன். அக்டோபர் 2 ஆம் தேதி, காந்தி ஆசிரமம், மேற்கு சம்பாரண் என்ற இடத்திலிருந்து பிகார் முழுவதும் 3,000 கிமீ 'பாதயாத்திரை' மேற்கொள்கிறேன்” என்றார்.

பின்னர் காங்கிரஸ் குறித்து தெரிவிக்கையில், “காங்கிரஸ் எப்படி செயல்பட வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும், நான் அல்ல. அவர்கள் முக்கியமானதாக கருதும் எந்த முடிவையும் அவர்கள் எடுத்தார்கள், நானும் அப்படித்தான். காங்கிரசுக்கு பிரசாந்த் கிஷோர் தேவையில்லை, கட்சிக்கு இன்னும் திறமையானவர்கள் உள்ளனர். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்” என்றார்.

இதையடுத்து பிகார் மாநில வளர்ச்சி தொடர்பான கேள்விக்கு, “லாலு மற்றும் நிதிஷ் ஆட்சியின் 30 ஆண்டுகளுக்குப் பிறகும் பிகார் இன்று நாட்டின் மிகவும் பின்தங்கிய மற்றும் ஏழை மாநிலமாக உள்ளது. வளர்ச்சியின் பல அளவுகோல்களில் பிகார் இன்னும் நாட்டின் மிகக் குறைந்த நிலையில் உள்ளது. இனிவரும் காலங்களில் முன்னணி மாநிலங்களின் பட்டியலில் பிகார் வர வேண்டுமானால் அதற்கு புதிய சிந்தனையும் புதிய முயற்சிகளும் தேவை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தற்போது தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை. 90 சதவீத பிகாரிகள் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்குகின்றனர். எனக்கு மக்கள் நலன்தான் முக்கியம்” என்றார்.

பிரசாந்த் கிஷோர் அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக அரசியல் வியூகங்கள் வகுத்தார். தற்போது தேர்தல் வரவுள்ள தெலங்கானா மாநிலத்துக்கு முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்-க்கு அரசியல் வியூகங்கள் வகுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திமுகவை பிரசாந்த் கிஷோர் இயக்குகிறார் - மு.க. அழகிரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.