ETV Bharat / bharat

தெற்கு வெற்றி உறுதியான, கிழக்கு ஊசலாட்டம் - அஸ்ஸாம்

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பொறுத்தவரை, கிழக்கில் ஊசலாட்டமாகவும், தெற்கு உறுதியானதாகவும் தெரிகிறது. மொத்தத்தில் 2021 மாநில தேர்தல்கள் முடிவுகள் பரபரப்பாக இருக்கும்.

கிழக்கு
கிழக்கு
author img

By

Published : Apr 30, 2021, 7:33 AM IST

Updated : Apr 30, 2021, 2:30 PM IST

மே 2ம் தேதி அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா ஆகிய நான்கு மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பான அறைகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெளியே கொண்டு வரப்படும் போது, ​​பல வேட்பாளர்களின் எதிர்காலம் தெரிய வரும்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு வெவ்வேறு மாநிலங்களில் குறைந்தது ஆறு வேட்பாளர்கள் இறந்ததால், அவர்களின் அரசியல் தலைவிதி என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது. ஆயினும் கூட, ஆரவாரமிக்க ஒரு தேர்தலாக சில காலம் நம் நினைவில் இருக்கும்.

இந்தியாவில் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் மற்றும் அதன் 294 சட்டமன்ற தொகுதிகளை போல எந்தவொரு மாநிலமும் கவனத்தை ஈர்க்கவில்லை. எட்டு கட்டங்களாக தேர்தல்களை நடத்த முடிவு செய்த தேர்தல் ஆணையத்திலிருந்து தொடங்கி, மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸிடமிருந்து அதிகாரத்தை பறிக்க காவி படையின் முயற்சிகள், இடது முன்னணியும், காங்கிரஸும் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கிக் கொண்டது, அகில இந்திய மதச்சார்பற்ற முன்னணியை (ஏ.ஐ.எஸ்.எஃப்) மதகுரு பீர்சாடா அப்பாஸ் சித்திகி தொடங்கியது வரை, மாநிலம் ஒரு தனித்துவமான தேர்தல் காலத்தை கண்டது. கோவிட் தொற்று காரணமாக இரண்டு இடங்களில் வேட்பாளர்கள் இறந்ததால் 292 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் தேர்தல் நடைபெற்றது.

மேற்கு வங்கம்
மேற்கு வங்கம்

10 ஆண்டுகால ஆட்சிக்கு எதிரான அலை மற்றும் கடுமையான சூறாவளி புயலான ஆம்பானால் ஏற்பட்ட பேரழிவிற்குப் பிறகு, மாநிலத்தின் தெற்குப் பகுதிகளில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலை என எல்லா எதிர்ப்பையும் எதிர்கொண்டவர், பாஜக என்ற தனது புதிய எதிர்ப்பையும் எதிர்கொண்டு நந்திகிராம் தொகுதியில் தேர்தலை சந்தித்தார். திரிணாமுல் மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஷோவந்தேப் சட்டோபாத்யாயின் நம்பகமான, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், சத்யஜித் ரே மற்றும் ஷியாமா பிரசாத் முகர்ஜி போன்ற பிரபலமான நபர்களுக்கான இல்லமாக இருந்த தென் கொல்கத்தாவில் தனது சொந்த பபனிபூர் தொகுதியை விட்டு வெளியேறினார்.

இடது முன்னணி மற்றும் காங்கிரஸின் செல்வாக்கின்மைக்கு பின்னர் மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, கிழக்கு மாநிலத்தை கைப்பற்ற தங்கள் முழு பலத்தையும் முயற்சியையும் மேற்கொண்டது. பிரதமர் நரேந்திர மோடி முதல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வரை அனைவரும் மாநிலத்தில் வெற்றி பெறுவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்தனர்.

வங்காளத்தின் இந்த தேர்தல் பிராந்திய சாதி வாக்கு பிளவு காரணிகளிலும் விளையாடியது. பிரதம மந்திரி மோடி தனது நாட்டின் சுற்றுப்பயணத்தின் போது அண்டை நாடான பங்களாதேஷில் உள்ள சாதியின் புனித தளத்தை பார்வையிட நேரம் ஒதுக்கியதால் மாதுவாஸின் உணர்வுகளுக்கு சர்வதேச முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அமித் ஷா பலமுறை வட வங்காளத்தில் 35 இடங்களுக்கு மேல் கணிசமான இடத்த்தில் செல்வாக்குள்ள ராஜ்பன்ஷிகளை அணுகியுள்ளார். பாஜக எந்த முயற்சியையும் விடவில்லை.

இதற்கு முன் பார்த்திராத, ஒரு உணவு சார்ந்த பரப்புரை பாணியை வங்காளம் கண்டது. அமித் ஷா முதல் நட்டா, மாநிலக் கட்சித் தலைவர் திலீப் கோஷ் வரை, அனைவருமே பரப்புரைக்கிடையில் ஒதுக்கப்பட்ட பிரிவை சேர்ந்த சில அனுதாபிகளின் வீட்டில் அவர்கள் உணவை பகிர்ந்து கொண்டனர்.

இந்த முறை கடினமாக இருக்கும் என்பது மம்தா பானர்ஜிக்குத் தெரியும். பாஜக தனது முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கவும், மம்தா அளவிற்கு கவர்ச்சியைப் பெறவும் ஒரு முகம் இல்லை என்பதை அறிந்திருந்தது. இடது முன்னணி, காங்கிரஸ் மற்றும் அவர்களது கூட்டணியினர் அவர்களுக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதை அறிந்திருந்தனர், இருப்பினும் அவர்கள் பழைய ஆட்களில் பெரும்பாலோரைத் தகர்த்து, இளம், திறமையான வேட்பாளர்களை நிறுத்தினர். ஆனால், எந்தவொரு கட்சியும், மாநிலத்தில் அடுத்த அரசு அமைக்க, பெரும்பான்மைக்கு தேவையான 148 இடங்களுக்கு நெருக்கமாக இல்லை என்பதை ஈடிவி பாரத்-தின் கருத்துக் கணிப்பு காட்டுகிறது,

திரிணாமுல் காங்கிரஸ் 131 இடங்களையும், பாஜக 126 இடங்களையும், இடது முன்னணியையும் அதன் கூட்டணி 32 இடங்களையும் வெல்லும். மூன்று இடங்களை மற்றவர்கள் பெற முடியும் என்று இந்த கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.

வங்காளத்தின் தொங்கு சட்டமன்றம் உருவாகி குதிரை பேரத்தை தொடங்குமா? அல்லது கணிப்புகள் தவறாகி, ஏதாவது ஒரு கட்சி அரசு அமைப்பதற்கு தேவையான இடங்களை பெறுமா? மின்னணு வாக்கு இயந்திரங்கள் இப்போது பேக் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. மே 2ம் தேதி தான் பதில் கிடைக்கும்.

அஸ்ஸாம்
அஸ்ஸாம்

பசுமையான வயல்களும் மலைகளும் நிறைந்த அஸ்ஸாம் மூன்று கட்ட தேர்தல்களுக்குச் சென்றது. அடிப்படையில் பாஜகவுக்கும் ஏழு கட்சிகளை உள்ளடக்கிய காங்கிரஸ்-அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) இணைப்பிற்கும் இடையே ஒரு நேரடி போட்டியை கண்டது. வடகிழக்கில் அமைந்துள்ள இந்த நுழைவாயில் மாநிலத்தில், ஈடிவி பாரத் கருத்துக் கணிப்பின்படி, அசாமில் மொத்தம் 126 சட்டமன்ற இடங்களில் 64 இடங்களை பாஜக தலைமையிலான கூட்டணி பெற வாய்ப்புள்ளது, அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான பெரும் கூட்டணி 55 இடங்களைப் பெறக்கூடும். சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகளின் உரிமை ஆர்வலர் அகில் கோகோய் தலைமையிலான புதிதாக தொடங்கப்பட்ட அசோம் ஜதிய பரிஷத் (ஏ.ஜே.பி), ரைஜோர் தளம் மற்றும் சுயேச்சைகள் மீதமுள்ள 7 இடங்களைப் பெறலாம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜக மேற்கொண்ட வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில் அவர்கள் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், இடையில் காங்கிரஸால் எழுப்பப்பட்ட குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான பெரும்பான்மை மக்கள் உணர்வு வாக்காளர்களின் மனநிலையை மாற்றியது..

பத்ருதீன் அஜ்மலின் AIUDF உடன் கூட்டணியை உருவாக்குவதன் மூலம் அதன் சிறுபான்மை வாக்குகளில் சிலவற்றை மீண்டும் பெறலாம் என்று காங்கிரஸ் கட்சி நம்பியது. இது தவிர, குறைந்தது 12 இடங்களின் முடிவை நிர்ணயிக்கும் போடோலாண்ட் மக்கள் முன்னணி (பிபிஎஃப்) உடனான கூட்டணி காங்கிரசுக்கு ஒரு நன்மையாக இருக்கலாம். அசாம் மீண்டும் பாஜக வசம் செல்லக்கூடும், ஆனால் அது ஒரு இனிப்பான வெற்றியாக இருக்காது. முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் படிப்படியாக அவரது துணை ஹேமந்தா பிஸ்வா சர்மாவால் மறைக்கப்பட்டதால், எந்த கடைசிநேர மாற்றங்களும் வெற்றியை பாதிக்கக்கூடும்.

தெற்கு வெற்றி உறுதியான
தெற்கு வெற்றி உறுதியான

கிழக்கிலிருந்து, தெற்கு நோக்கி.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இ.பி.எஸ் ஆட்சி முடிவடைந்து, மாநிலத்தில் அடுத்த அரசை திமுக அமைக்கத் தயாராக உள்ளதாகவும் தெரிகிறது. ஈ.டி.வி.பாரத் கணிப்பின்படி, திமுக கூட்டணி 133 இடங்களைப் பெற முடியும் என்பதைக் காட்டுகிறது, அதேசமயம் அதிமுக முன்னணிக்கு 89 இடங்களும் 12 இடங்களை மற்றவர்களும் வெல்வார்கள். மாநிலத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது,

2016ல் தேர்தலில் தோல்வியடைந்த திராவிட முன்னேற்ற கழகம் (திமுக), கட்சித் தலைவர் எம்.கே.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்று, அடுத்த அரசு அமைக்க தயாராக உள்ளது.

அதிகாரத்தில் இருந்துபோது, மத்திய பாஜகவின் ஆதரவுடன் அதிமுகவினரை ஒன்றாக வைத்திருக்க முடிந்த சாதனையை செய்த தற்போதைய முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி (இபிஎஸ்), 10 ஆண்டுகளுக்குப் பிறகு வாய்ப்புகளை தவறவிட்டதாகத் தெரிகிறது. ஆளும் கட்சி 90 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், மேற்கு தமிழ்நாடு அதன் கோட்டையாக எஞ்சியிருந்தாலும், அதன் எதிர்காலம் ஒரு நிலையை எட்டியுள்ளதாக தெரிகிறது. கணிப்புகளின்படி, திமுக பெரும்பான்மையை பெற்றுவிடும்.

காங்கிரஸ், இடது கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லீம் கட்சிகள் மற்றும் ஒரு சில கட்சிகளை உள்ளடக்கிய திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டுகிறது. கூட்டணி கணக்கை கருத்தில் கொண்டால், அது பா.ஜ.க.வை ஒரு சுமையாக இணைத்திருக்கும் அதிமுகவை விட திமுக கூட்டணி சிறந்த நிலையில் உள்ளது. மு.கருணாநிதி அல்லது ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத நிலையில் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடைபெறுவதால், மு,க.ஸ்டாலின் தனது சொந்த முயற்சியில் ஒரு தலைவராக உருவெடுத்திருப்பதை இந்த தேர்தல் நிரூபிக்கும்.

தமிழ்நாடு
தமிழ்நாடு

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த திமுகவின் அடுத்த தலைமுறை தலைவரான உதயநிதி ஸ்டாலின், காட்பாடியில் மூத்த தலைவர் துரைமுருகன் மற்றும் திருச்சிராப்பள்ளியில் வலுவான கே.என். நேரு ஆகியோர் முக்கிய வெற்றியாளர்களில் அடங்குவர்.

முதலமைச்சர் இ.பி.எஸ் தனது சொந்த ஊரான எடப்பாடியிலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவருடைய அமைச்சரவை சகாக்களில் பெரும்பாலோர் கரைசேர மாட்டார்கள்., அதிமுகவின் பழிவாங்க துடிக்கும் சசிகலாவின் மருமகன் டி.டி.வி தினகரன், கோவில்பட்டியில் இருந்து வெற்றிபெறக்கூடும்.

சட்டமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் செல்வாக்கில், சிவகங்கை மாவட்டத்தில் கட்சி வெற்றிபெறும் நிலையில் உள்ளது. திமுககூட்டணியின் அங்கமாக இருக்கும் இடது கட்சிகள் மற்றும் தொல்.திருமாவளவனின் வி.சி.க போன்ற கட்சிகள் புதிய சட்டமன்றத்தில் அங்கம் வகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாலின் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும், கல்வி கடன்களை தள்ளுபடி செய்வது மற்றும் ஒற்றை தாய் மற்றும் பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.1,500 நிதியுதவி உள்ளிட்ட திமுக தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்துவதில் பெரும் சவால் அவருக்காக காத்திருக்கும்.

140 சட்டமன்ற இடங்கள் கொண்ட மாநிலமான கேரளாவில், ஈடிவி பாரத்தின் கணிப்பின்படி, சிபிஐ (எம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து சரித்திரம் படைக்கப் போகிறது. இது கடவுளின் சொந்த நாட்டில் ஆட்சிக்கு எதிரான அலை இல்லை என்பதைக் குறிக்கிறது.

கேரளா
கேரளா

LDF 2016 தேர்தலில் வென்ற இடங்களில் சுமார் 11 இடங்களை இழக்கக்கூடும், சென்றமுறை வென்ற 93ல் இருந்து இந்த முறை 82 ஆகக் குறைக்கப்படலாம், ஆனால், செங்கொடியினர் அறுதி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

நிபா பரவல், தொடர் வெள்ளம் மற்றும் கோவிட் தொற்றுநோய் போன்ற நெருக்கடி காலங்களில் சமூக நல நடவடிக்கைகள், மேம்பாட்டு பணிகள் மற்றும் வலுவான தலைமை ஆகியவை பினராயி விஜயன் தலைமையிலான LDFக்கு வாக்களிக்க மக்கள் தேர்ந்தெடுத்த காரணங்கள் என கணிப்புகள் காட்டுகின்றன,

எதிர்க்கட்சி காங்கிரஸால் எழுப்பப்பட்ட ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அல்லது பணியாளர் தேர்வாணைய பணியாளர்களின் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக பரப்புரையின் ஆரம்பத்தில் LDF தோற்பது போல தெரிந்தாலும், இறுதியாக சிறந்த ஆட்சி என்ற விஷயம் விஜயனுக்கும் அவரது தோழர்களுக்கும் ஆதரவாக மாறியது.

UDF 2016ஆம் ஆண்டில் வென்ற 45 இடங்களை விட இந்த முறை 56 இடங்களை வெல்லும். மத்திய கேரளா மற்றும் IUML கோட்டைகள் UDF வாக்குகளைப் பாதுகாத்து வருகின்ற அதே வேளையில், UDFல் இருந்து கேரள காங்கிரஸ் (எம்) வெளியேறியது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். கேரள காங்கிரஸ் (எம்) இப்போது LDF கூட்டணியில் உள்ளது. பாரம்பரிய காங்கிரஸ் தொகுதிகள் இடதுசாரிகளுக்குத் செல்வதாக தெரிகிறது என்றாலும், IUMLன் வலுவான வாக்கு வங்கி காங்கிரஸிற்கு ஆறுதல் தரக்கூடும்.

ராகுலின் காந்தி காரணி கூட வயநாடு மக்களவைத் தொகுதிகுட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் LDFஇன் செல்வாக்கை தகர்க்க தவறிவிட்டது. 2019ல் காங்கிரஸ் அதிக வாக்குகள் பெற்ற ஏழு சட்டமன்ற இடங்களில் நான்கு இடங்கள் LDF வசம் செல்லும் என்று கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

காங்கிரஸின் சசி தரூர் 2019இல் சுலபமாக வென்ற திருவனந்தபுரத்தில் மீண்டும் அதே நிலைமை தான். ஆனால், திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதிகுட்பட்ட ஏழு சட்டமன்ற இடங்களில் LDF நான்கு இடங்களை வெல்லக் கூடும்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்

2016 தேர்தலில் ஒரு இடத்தில் வென்ற பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி இந்த தேர்தலில் போராட வேண்டியிருக்கும். கடந்த தேர்தலில் பாஜகவின் முதல் சட்டமன்ற உறுப்பினராக ஓ ராஜகோபால் வெற்றி பெற்ற நேமம் தொகுதியில் LDF மற்றும் UDF இரண்டும் கடுமையான சவாலை கொடுத்துள்ளன. பாலக்காட்டில் இருந்து மெட்ரோமேன் ஈ ஸ்ரீதரன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

மொத்தத்தில் அனைவரின் கவனமும் நிச்சயமாக மே 2 இறுதி முடிவுகளுக்காக எதிர்நோக்கி இருக்கும்.

Last Updated : Apr 30, 2021, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.