ETV Bharat / bharat

ஆபாச படம் பதிவேற்றம்: ராஜ் குந்த்ராவை போலீஸ் காவலில் வைத்திட உத்தரவு

ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் கைதான ராஜ் குந்த்ராவை, ஜூலை 23ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்திட, மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜ் குந்த்ரா
ராஜ் குந்த்ரா
author img

By

Published : Jul 20, 2021, 6:15 PM IST

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை காவல் துறையினரால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டார்.

ஆபாசப் படங்களைத் தயாரித்த ராஜ் குந்த்ரா, அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய செல்போனை ஆய்வுசெய்ததில், ஆபாச படம் விற்பனை செய்ததற்கான பணப் பரிமாற்றங்களுக்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜ் குந்த்ராவை ஜூலை 23ஆம் தேதிவரை போலீஸ் காவலில் வைத்திட, மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவருடன் கைதுசெய்யப்பட்ட ரியான் தோர்பேவையும், ஜூலை 23 வரை போலீஸ் காவலில் வைத்திட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சுதந்திர தினத்தன்று ட்ரோன் தாக்குதலுக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.