புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள பதிவில், "புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைத்து ஐந்து மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் மக்களுக்கு எந்தவிதப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .
அரசியல் ரீதியாக என். ஆர். காங்கிரஸ் பாரதிய ஜனதாவிடம் சரணாகதி அடைந்துள்ளது. அலங்கோலமான ஆட்சியை ரங்கசாமி நடத்தி வருகிறார். எது நடந்தாலும் பரவாயில்லை, தனது முதல்வர் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள அவர் பாஜகவிடம் சரணாகதி அடைந்துள்ளார்.
இந்த சூழலில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைப்படி பாரபட்சமின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் வகையில் நடைபெற வேண்டும். அதிகாரிகள் திறம்பட நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளளார்.
இதையும் படிங்க : ‘ருத்ர தாண்டவம்’ படத்தைப் புகழ்ந்த அர்ஜுன் சம்பத், கிருஷ்ணசாமி