ETV Bharat / bharat

ஆளுநர் - முதலமைச்சர் சந்திப்பு - உள்ளாட்சி தேர்தல் இட பங்கீடு குறித்து பேச்சு? - உள்ளாட்சி தேர்தல்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை முதலமைச்சர் ரங்கசாமி ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார்.

ஆளுநர் தமிழிசையை சந்தித்த ரங்கசாமி
ஆளுநர் தமிழிசையை சந்தித்த ரங்கசாமி
author img

By

Published : Sep 28, 2021, 6:16 PM IST

புதுச்சேரி: முதலமைச்சர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை இன்று (செப்.28) ஆளுநர் மாளிகையில் திடீரென சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது.

புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கின்றது. 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துக்கான உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 21, 25, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. முதல்கட்ட வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் முதலமைச்சர், ஆளுநரைச் சந்தித்து பேசியுள்ளது உள்ளாட்சி தேர்தல் இட பங்கீடு தொடர்பாக இருக்குமோ என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

ஒவ்வொரு தேர்தலின் போதும் சந்திப்பு

ஒவ்வொரு தேர்தலின் போதும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆளுநர் தமிழிசையை சந்திப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்தவகையில் சட்டப்பேரவை தேர்தலின் போதும் சந்தித்தார். அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கு முன்பாகவும் சந்தித்தார். இதில் பாஜகவை தேர்ந்த செல்வகணபதி போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதலமைச்சர், ஆளுநர் சந்திப்பின்போது எப்போதும் ஆளுநர் மாளிகையிலிருந்து புகைப்படம் வெளியிடப்படும், ஆனால் இன்று வெளியிடப்படவில்லை. ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறிய முதலமைச்சர் ரங்கசாமியிடம், செய்தியாளர்கள் திடீர் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பினர், ஆனால் அதற்கு அவர் எந்தவித பதிலும் கூறாமல் சென்று விட்டார் .

இதையும் படிங்க: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு குறித்து ஆலோசனைக் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.