புதுச்சேரி: திருஷ்டி கழிக்க கருங்காலி குச்சியுடன் சுற்றிவரும் புதுச்சேரி பாஜக தலைவரின் செயல் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.
புதுச்சேரி பாஜக தலைவரும், நியமன சட்டப்பேரவை உறுப்பினருமான சாமிநாதன் கடந்த ஒரு வாரமாக எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் கறுப்பு வண்ணத்தில் ஒரு குச்சியை கையில் வைத்துள்ளார். நடைப்பயிற்சி செல்லும்போதும், அனைத்து நிகழ்ச்சிக்குச் செல்லும்போதும், அவர் அந்தக் குச்சியை வைத்துள்ளார்.
இது குறித்து சாமிநாதனிடம் கேட்டபோது, அது கருங்காலி கட்டை என்றும்; திருஷ்டி கழிப்பதற்காக இதை வைத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
புதுச்சேரியில் 2021ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில், பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்காகத்தான், இந்தக் கருங்காலிக் கட்டையை மந்திரித்து அவர் வைத்திருப்பதாக பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கருங்காலி கட்டை பொதுவாக பல நற்குணங்ளைக் கொண்டது. இது பல வகையில் மருந்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது. குளிக்கும் நீரில் இதனைப் போட்டு, குளித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி உடனே புத்துணர்வு கிட்டும். இச்சூழலில், திருஷ்டி கழிக்க கருங்காலி குச்சியுடன், சுற்றிவரும் புதுச்சேரி பாஜக தலைவரின் செயல் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.