உத்தரகாண்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள புஷ்கர் சிங் தாமி மாநிலத்தின் அரசியல் நிலவரம், அரசின் செயல்பாடுகள் குறித்து ஈடிவி பாரத்திடம் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
அவர் பேசியதாவது, "மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்ற அமைச்சர்களுடன் டெல்லியில் விவாதித்தேன்.
சீனா-நேபாள எல்லையை ஒட்டி உருவாகிவரும், தானக்பூர்-பாகேஷ்வர் ரயில் திட்டம் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் இந்தத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சார்தம் சாலை திட்டம் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் பேசினேன்.
அனைத்து திட்டங்களுக்கு உரிய நிதியுதவி வழங்கி, விரைந்து முடிக்க ஒத்துழைப்பு வழங்குவோம் என அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.
அரசின் மீது தேவையில்லாத களங்கத்தை சுமத்துவதே எதிர்க்கட்சிகளின் வேலையாக உள்ளது. அவர்களும் வேலை செய்ய மாட்டர்கள், அரசையும் வேலை செய்ய விட மாட்டார்கள். ஆனால், மாநில நலனுக்காக அரசு தொடர்ந்து பணியாற்றும்.
மாநிலத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை குறித்து எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம். அரசு உறுதித் தன்மையுடன் உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: ’60% மக்களின் குரல் ஒடுக்கப்படுகிறது’ - எதிர்க்கட்சிகள் பேரணியில் ராகுல் குற்றச்சாட்டு