பயணங்கள், அனுபவங்களின் ஊற்று. ஒவ்வொரு பயணமும், வாழ்க்கையின் பக்கத்தில் ஏதேனும் ஒரு அனுபவக் குறிப்பை தானாகவே எழுதிச் செல்லும் ஆற்றல் படைத்தது. அப்படித்தான் கர்நாடகா மாநிலத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய பைக்கருக்கு தமிழ்நாட்டில் ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அனிஅருண், புதுச்சேரி சாலை மார்க்கமாக தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திற்கு தனது பைக்கில் வந்துள்ளார். அப்போது சாலையில் நின்றிருந்த காவலர் அனிஅருண் (AnnyArun) இயக்கி வந்த வாகனத்தை இடைமறித்துள்ளார். பொதுவாக, காவல் துறையினர் வழிமறித்தாலே ஏதேனும் ஏழரையில் சிக்கிவிடுவோமோ என்ற பயம் வாகன ஓட்டிகளைத் தொற்றிக்கொள்ளும். அனிஅருணும் அதற்கு விதிவிலக்கில்லை.
-
Thank you 🙌 https://t.co/nCBd0Wikg0
— AnnyArun (@anny_arun) March 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you 🙌 https://t.co/nCBd0Wikg0
— AnnyArun (@anny_arun) March 25, 2021Thank you 🙌 https://t.co/nCBd0Wikg0
— AnnyArun (@anny_arun) March 25, 2021
ஆனால் காவலரோ ஆவணங்களைக் குறித்து ஒரு வார்த்தைக்கூட கேட்காமல், வேறொரு உதவி கேட்டு அருணைத் திகைக்கவைத்தார். சற்று முன் கடந்து சென்ற அரசு பேருந்திலிருந்த பயணி மருந்து பாட்டிலை தவறவிட்டுவிட்டார் எனக் கூறிய காவலர், அதை உரியவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
காவலரின் மனிதாபிமானத்தைக் கண்டு வியந்த அருண், வேகமாகச் சென்று அதை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவத்தை தனது ஹெல்மெட் கேமராவில் வீடியோவாக பதிவு செய்து அவர் யூடியூபில் பதிவிடவே அது வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க:சரக்கு வாங்க காசு இல்லாமல் சானிடைசர் குடித்து உயிரைவிடும் மதுப்பிரியர்கள்!