ETV Bharat / bharat

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய சமூக செயற்பாட்டாளர்!

போபால்: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராடிவரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக மத்தியப் பிரதேசத்தில் களமிறங்கிய சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

author img

By

Published : Nov 26, 2020, 3:30 PM IST

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேசிய தலைநகர் டெல்லியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியைச் சேர்ந்த 33 விவசாய சங்கங்கள் சார்பில் நவம்பர் 26ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஹரியானா மாநில எல்லைப் பகுதியில் நேற்று குவிந்தனர். அவர்கள் டெல்லிக்குப் பேரணியாகச் செல்ல முயற்சித்தனர். ஆனால், அவர்களைத் தடுக்கும்விதமாக பாஜக ஆளும் ஹரியானாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, டெல்லி - ஹரியானா எல்லையான ஃபரிதாபாத், டெல்லி - ஜம்மு நெடுஞ்சாலை அருகே கர்னல் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு காவல் துறையினரும் மத்திய ரிசர்வ் காவல் படையினரும் குவிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி, மெட்ரோ ரயில் சேவை மதியம் 2 மணிவரை ரத்துசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஹரியானா மாநிலம் அம்பாலாவில் குவிந்த விவசாயிகள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து காவல் துறையினர் கலைக்க முயற்சித்தனர். பின்னர், அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், ஆக்ரா - குவாலியர் நெடுஞ்சாலையில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் குதித்த சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இது குறித்து மேதா பட்கர் கூறுகையில், "கைதுசெய்வதற்கான ஆணையையோ உத்தரவையோ காவல் துறையினர் எங்களிடம் காட்டவில்லை. எங்களுக்குத் தண்ணீர், உணவு போன்ற அடிப்படை வசதிகள்கூட தரப்படவில்லை" என்றார்.

சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர்

மேதாவையும் விவசாயிகளையும் திருப்பி அனுப்ப காவல் துறையினர் முயற்சித்தனர். இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால், அங்கு போக்குவரத்து கடும் பாதிப்படைந்தது. முன்னதாக, இரவு முழுவதும் 152 போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.