முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உடல்நலக் குறைவு காரணமாக, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் மறைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் நேற்று(ஏப்.22) போலிச் செய்தி பரப்பப்பட்டு உலா வந்தது.
அதை உண்மை என நம்பி காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் உள்ளிட்ட பலர் அஞ்சலி, அனுதாபத்தைத் தெரிவித்து செய்திகளை வெளியிட்டனர். இந்தத் தகவல் உண்மை அல்ல என்று சுமித்ரா மகாஜனின் மகன் விளக்கமளித்த நிலையில், சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், இப்போலி செய்தி தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் அப்பகுதி பாஜக கவுன்சிலர் சுதிர் காவல்துறையில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து உடனே வழக்குப்பதிவு செய்துள்ள மத்தியப் பிரதேச காவல்துறை விசாரணையைத் தொடங்கி, போலி செய்தி பரப்பிய நபரை தேடிவருகிறது.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்திற்கான ஆக்ஸிஜன் உ.பிக்கு செல்கிறது - மம்தா குற்றச்சாட்டு