மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை சூடுபிடித்துள்ளது. மொத்தம் எட்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவானது கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது.
முதலமைச்சர் மம்தா பானர்ஜி களமிறங்கும் நந்திகிராம் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகக் கருதப்படுகிறது. முதலமைச்சர் மம்தாவை எதிர்த்து அவரது முன்னாள் தளபதியான சுவேந்து அதிகாரி பாஜக வேட்பாளராக அங்கு களமிறங்குகிறார்.
ஏப்ரல் ஒன்றாம் தேதி நந்திகிராமில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அங்கு பாஜக மக்களை மறைமுகமாக மிரட்டிவருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். அங்கு மத்தியப் பிரதேச காவல் துறையினரைப் பாதுகாப்புப் பணியில் அமர்த்தி, கிராமத்து மக்களை மிரட்டி தங்களுக்குச் சாதகமாக வாக்குகளைப் பெற பாஜக வேலை பார்த்துவருகிறது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேலும், அங்கு மதக் கலவரத்தைத் தூண்ட பாஜக சதி செய்துவருகிறது, எனவே தேர்தல் ஆணையம் கவனத்துடன் நிலவரத்தைக் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மோடி, பினராயி, அதானி இடையே ரகசிய உடன்படிக்கை - காங். குற்றச்சாட்டு