பதாவுன் : உத்தர பிரதேசத்தில் எலியை நீரில் மூழ்கி கொன்ற குற்றச்சாட்டிற்காக இளைஞர் மீது 30 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்த சம்பவம் விநோத சம்பவம் அரங்கேறி உள்ளது. பதாவுன் அடுத்த கல்யான் நகரை சேர்ந்தவர் மனோஜ் குமார், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி செங்கல்லில் எலியின் வாலை கட்டி அதை தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
இதைக் கண்ட குமார் என்பவர் மனோஜ் குமாருடன் சண்டையிட்டு எலியை காப்பற்ற முயன்ற போது அது இறந்து போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக குமார் அளித்த புகாரில் மனோஜ் குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் எலியின் சடலம் உடற்கூராய்வுக்கு ஆனுப்பப்பட்டது.
இதனிடையே மனோஜ் குமார் நீதிமன்றத்தில் முறையிட்டு ஜாமீன் பெற்றார். இந்நிலையில் உயிருடன் எலியை தண்ணீரில் மூழ்கி கொன்றதாக மனோஜ் குமார் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன மருத்துவர்கள் எலியை பிரேத பரிசோதனை செய்தனர். இதனிடயே பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
மேலும் எலியை கொன்றதாக மனோஜ் குமார் மீது 30 பக்க அளவிலான குற்றப்பத்திரிக்கையை போலீசார் தாக்கல் செய்து உள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் மனோஜ் குமார் செங்கல்லில் எலியின் வாலை கட்டி அதை நீரில் மூழ்கியதால் எலி உயிரிழக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உடற் கூராய்வில் எலியின் நுரையீரல் பகுதியில் தண்ணீர் தேங்கியதற்கான தடயம் இல்லை என்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு எலி இறந்து இருக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும் எலியின் நுரையீரல் உள்ளிட்ட உள்ளிருப்பு பாகங்கள் சேதமடைந்து இருப்பதாகவும் தண்ணீரில் மூழ்கப்பட்டதால் தசை நார்கள் கிழிந்து இரத்தக் கசிவு ஏற்பட்டு இறந்து இருக்கக் கூடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தண்ணீரில் மூழ்கி இளைஞர் துன்புறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் எலி இறக்கவில்லை என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : பசு கோமியத்தால் மனிதர்களுக்கு ஆபத்தா? அதிர்ச்சி தரும் தகவல்கள்!