ETV Bharat / bharat

"இந்தியா" பெயர் விவகாரம்.. 26 எதிர்க்கட்சிகள் மீது புகார்! எதுக்கு தெரியுமா?

இந்தியா என்று எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பெயர் வைக்கும் முடிவு இந்தியர் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அனைத்து இந்தியர்களின் மனதையும் புண்படுத்தி உள்ளதாக 26 எதிர்க்கட்சிகள் மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

INDIA
INDIA
author img

By

Published : Jul 19, 2023, 8:51 PM IST

டெல்லி : இந்தியா என்ற பெயரை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக கூறி 26 எதிர்க்கட்சிகள் மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

2024ஆம் ஆண்டு நாடளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகள் ஒரணியில் திரண்டு உள்ளன. கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து கடந்த ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் தலைமையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டாவது கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி "இந்தியா" என பெயரிடப்பட்டது.

தேர்தல் வியூகம், நாடு தழுவிய போராட்டம் மற்றும் பிரசாரம், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் முடிந்த மறுநாளில் 26 எதிர்க்கட்சிகள் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளன.

இந்தியா என்ற பெயரை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் புகார் அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சின்னங்கள் சட்டப் பிரிவின் கீழ் இந்திய தேசிய காங்கிரஸ், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவார், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு (என்சி), மக்கள் ஜனநாயகக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, சிவசேனா, சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தளம், அப்னா தளம், அகில இந்திய பார்வர்ட் பிளாக், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி (எம்எம்கே), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட 26 கட்சிகள் மீது டெல்லி பரக்ஹம்பா காவல் நிலையத்தில் டாக்டர் அவினாஷ் மிஸ்ரா என்பவர் புகார் அளித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என எதிர்க்கட்சிகள் பெயர் வைத்து உள்ளது இந்தியக் குடிமகன் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அனைத்து இந்தியர்களின் மனதையும் புண்படுத்தி இருக்கும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கில் புகார்தாரர்களுக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இன்ஸ்டாகிராம் காதல்.. காதலனை மணக்க 6வயது மகளுடன் ஜார்கண்ட் வந்த போலந்து பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.