உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் எட்டு காவலர்களைக் கொலைசெய்த வழக்கு உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி விகாஸ் துபே, கடந்த ஆண்டு ஜூலை 10ஆம் தேதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, விகாஸ் துபேவின் கூட்டாளிகளைக் காவல் துறையினர் தேடி விசாரித்துவருகின்றனர். அந்த வகையில் விகாஸ் துபே என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டபோது, தப்பித்த விபுல் துபேவை காவல் துறையினர் தேடிவந்தனர். அதுமட்டுமின்றி, விபுல் துபே தலைக்கு 50 ஆயிரம் ரூபாயும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று (ஜன. 07) விபுல் துபேவை கட்ம்பூரில் வைத்து கான்பூர் காவல் துறையினர் கைதுசெய்தனர். தற்போது விபுல் துபேவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க...விகாஸ் தூபே என்கவுன்ட்டர்: விசாரணைக்கான கால அவகாசம் நீட்டிப்பு