டெல்லியைத் தளமாகக் கொண்ட சதர்பூர் பகுதியில் உள்ள சர்தார் படேல் கரோனா பராமரிப்பு மையத்திற்கு (எஸ்.பி.சி.சி.) 150 வென்டிலேட்டர்களை வழங்குமாறு பிரதமர் அலுவலகம் (பி.எம்.ஓ.), மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு நேற்று (மே 1) உத்தரவிட்டது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலர் மந்தீப் பண்டாரிக்கு எழுதிய கடிதத்தில், பிரதமரின் ஆலோசகர் பாஸ்கர் குல்பே கூறியதாவது, "உங்களுடன் விவாதித்தபடி, பிரதமர் நிதியின்கீழ் வழங்கப்பட்ட 150 வென்டிலேட்டர்கள், ஜி.பி.எஸ். இயக்கப்பட்ட சாதனங்களுடன் இணைக்கப்பட்டவை.
கிடைக்கக்கூடிய பங்குகளிலிருந்து கடன் அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு வழங்கப்படலாம், இது தேவைப்பட்டால், மறுபரிசீலனைக்கு மேலும் நீட்டிக்கப்படலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்களால் இந்த வென்டிலேட்டர்களை உடனடியாக இன்ஸ்டால் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் அவர்களைக் கொண்டே எஸ்.பி.சி.சி.க்கு ஆலோசனை வழங்கவும், அதேசமயம் சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷணுக்கு இந்த முடிவு குறித்து தெரிவிக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.