ETV Bharat / bharat

கப்பல் படைக்கு புதிய கொடி: காலனியாதிக்கம் முறியடிப்பு... கடல்சார் பாரம்பரியத்தின் அடையாளம்! - கப்பல் படை புதிய கொடி அறிமுகம்

இந்திய கப்பல் படைக்கு 'நிஷான்' (Nishaan) என்று பெயரிடப்பட்ட புதிய கொடியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.2) அறிமுகம் செய்து வைத்தார்.

இந்திய கப்பல் படைக்கு புதிய கொடி
இந்திய கப்பல் படைக்கு புதிய கொடி
author img

By

Published : Sep 2, 2022, 3:05 PM IST

இந்தியாவிலேயே முழுமையாக கட்டப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தை நாட்டிற்கு பிரதமர் மோடி அர்ப்பணித்ததைத் தொடர்ந்து, அந்த விழாவிலேயே கப்பல் படைக்கு புதிய கொடி அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

மராத்திய ராஜ்ஜியத்தை தோன்றுவித்த மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் அரசு முத்திரையின் நினைவாக இந்த புதிய கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி தனது போர்ப்படைகளில் கப்பல் படையையும் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 'நிஷான்' (Nishaan) என்று பெயரிடப்பட்ட புதிய கொடி, காலனியாதிக்க நினைவுகளை ஓரங்கட்டி, இந்தியாவின் கடற்படை பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், இந்திய கப்பல் படை கொடியில் செயின்ட் ஜார்ஜ் சிலுவை குறியுடன், இந்திய மூவர்ணக்கொடி இடம்பெற்றிருந்தது. வெள்ளை நிற பின்னணியில், சிவப்பு நிற சிலுவை தான் செயின்ட் ஜார்ஜ் சின்னமாக இருந்தது. சுதந்திரத்திற்கு முன் இந்திய கொடிக்குப் பதிலாக இங்கிலாந்தின் யூனியன் ஜாக் கொடி அதில் இடம்பெற்றிருந்தது.

சுதந்திரத்திற்குப் பின் பலமுறை இந்த இந்திய கப்பல் படையின் கொடி மாற்றப்பட்டது. ஒரே ஒரு முறை, 2001ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் சிலுவை குறி நீக்கப்பட்டு, இந்திய கப்பல் படை முகடு கொடியில் இடம்பெற்றது. பின்னர் மீண்டும் 2004ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் சிலுவை வைக்கப்பட்டது. அத்துடன் புதிதாக அசோக சின்னமும் வைக்கப்பட்டது.

இந்திய கப்பல் படைக்குத் தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கொடியின் இடதுபுறத்தின் மேலே இந்திய மூவர்ணக்கொடி இடம்பெற்றிருக்கும். வலதுபுறத்தில் நீல நிறத்திலான எண்கோண வடிவத்தில் (Octagonal Shape) அசோக சின்னத்துடன் நங்கூரம் இருப்பது போன்ற இலட்சினையும் இடம்பெற்றுள்ளன. அந்த இலச்சினையில் கப்பல் படையின் பொன்மொழியான 'சத்தியமேவ ஜெயதே' எழுதப்பட்டிருக்கும்.

இந்த புதிய கொடி குறித்து இந்திய கப்பல் படை வெளியிட்டுள்ள காணொலியில்,"எண்கோண வடிவில் தங்க நிறத்திலான இரட்டை எல்லைக்கோடுகள் வரையப்பட்டிருக்கும். இது இந்தியாவின் மிகச்சிறந்த மன்னரான சத்ரபதி சிவாஜியின் முத்திரையின் நினைவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரின் தொலைக்நோக்கான கடல்சார் கண்ணோட்டம் கொண்ட கப்பல் படையினால் தான், நாம் தற்போது நம்பகமான கப்பல் படையை உருவாக்கியுள்ளோம்.

அவருடைய கப்பல் படையில், 50 போர் தாக்குதல் கப்பல்களும், அதில் 5 ஆயிரம் படை வீரர்களும் போரிட்டுள்ளனர். மராத்திய ராஜ்ஜியத்தின் தொடக்கமான அவருடைய காலகட்டத்தில் அந்நிய சக்திகளிடம் இருந்து நம்முடைய கடல் எல்லையைப் பாதுகாத்தவர் அவர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் புதிய கொடியில் இடம்பெற்றுள்ள எண்கோண வடிவம் என்பது எட்டு திசைகளைக் குறிக்கும் என்றும்; இது நமது கப்பல் படை பல்வேறு அடுக்குகளில் செயல்படுவதைச் சுட்டிக்காட்ட இது இடம்பெற்றுள்ளது என்று இந்திய கப்பல் படை தெரிவித்தது.

நமது உறுதிப்பாட்டை குறிக்கவே 'நங்கூரம்' இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பிரதமர் மோடி,"இதுநாள் வரை அடிமை சின்னத்தை சுமந்திருந்த இந்திய கப்பல் படையின் கொடி, தற்போது மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் நினைவால் உருவாக்கப்பட்ட சின்னத்திற்கு மாற்றப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ரூ. 23 ஆயிரம் கோடி... 40 ஆயிரம் டன் எடை... விக்ராந்த் போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.