கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணியில் உலகின் பல நாடுகள் முயற்சி செய்துவருகின்றன. அந்த வரிசையில், இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ஐசிஎம்ஆர்) இணைந்து கோவாக்சின் என்ற கரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.
இந்தத் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து தற்போது மூன்றாம் கட்ட ஆய்வக பரிசோதனை நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. மூன்றாம் கட்ட பரிசோதனையில் 26 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்கவுள்ளனர்.
கரோனா தடுப்பூசிக்கான பரிசோதனை பணிகள் எந்தளவுக்கு எட்டியுள்ளது என்பதைக் கண்காணிக்கும் வகையில் ஹைதராபாத்திற்கு பிரதமர் மோடி நவம்பர் 28ஆம் தேதி செல்லவுள்ளார்.
இதுகுறித்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா, "மற்றொரு கரோனா மருந்தைத் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மூக்கின் வழியே செலுத்த வேண்டிய இம்மருந்து அடுத்தாண்டு தயார் செய்யப்படும்" என்றார்.