நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை தீவிரமாகிவருகின்றது. இந்நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலம் நாட்டின் முன்னணி மருத்துவர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை 4:30 மணி அளவில் ஆலோசனை செய்தார்.
இதைத் தொடர்ந்து, 6 மணி அளவில் கரோனா நிலை குறித்து மருந்து நிறுவனங்களின் தயாரிப்பாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு 2.73 லட்சம் பேர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் ஆக்ஸிஜன், மருந்து பற்றாக்குறை நிலவிவருவதாக பல்வேறு மாநில முதலமைச்சர்கள் குற்றம்சாட்டிவரும் நிலையில், இக்கூட்டம் நடைபெறவுள்ளது.