ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன் தினம் (செப்-2) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கப்படவில்லை. அதற்கான காரணம் என்ன என்று அந்த மாவட்ட ஆட்சியரிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்.
-
You wanted pictures of Modi ji ,
— krishanKTRS (@krishanKTRS) September 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Here you are @nsitharaman ji …@KTRTRS @pbhushan1 @isai_ @ranvijaylive @SaketGokhale pic.twitter.com/lcE4NlsRp5
">You wanted pictures of Modi ji ,
— krishanKTRS (@krishanKTRS) September 3, 2022
Here you are @nsitharaman ji …@KTRTRS @pbhushan1 @isai_ @ranvijaylive @SaketGokhale pic.twitter.com/lcE4NlsRp5You wanted pictures of Modi ji ,
— krishanKTRS (@krishanKTRS) September 3, 2022
Here you are @nsitharaman ji …@KTRTRS @pbhushan1 @isai_ @ranvijaylive @SaketGokhale pic.twitter.com/lcE4NlsRp5
அத்துடன் மாலைக்குள் மோடியின் புகைப்படத்தை வைக்க உத்தரவிட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு அம்மாநில தொழிற்துறை அமைச்சர் கே.டி.ஆர் ட்விட்டர் மூலம் பதிலளித்துள்ளார். அதில், ‘"நீங்கள் மோடி ஜியின் புகைப்படங்களை கேட்டீர்களே... இங்கே பாருங்கள் நிர்மலா ஜி... என்று குறிப்பிட்டு, பிரதமரின் புகைப்பட்டம் ஒட்டப்பட்ட காஸ் சிலிண்டர்கள் அடங்கிய வீடியோவை ரீட்வீட் செய்துள்ளார். அந்த வீடியோவில் உள்ள சிலிண்டர்களில் "மோடி ஜி ரூ.1105" என்று எழுதப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:Video: புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அராஜகமாக நடந்துகொண்ட பாஜக எம்எல்ஏ