அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் தனக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக கடந்த 3ஆம் தேதி ட்விட்டர் வாயிலாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப்ரல் 4) தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டுவர எனது வாழ்த்துகள்’ எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு நன்றி கூறும்விதமாக, ’எனது உடல்நிலை முன்னேற்றத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த நன்றி. தொற்றிலிருந்து பாதுகாக்க உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்று ஆர்பர்டோ பெர்னாண்டஸ் ட்வீட்டில் பதிவிட்டிருந்தார்.
ரஷ்யா தயாரித்த தடுப்பூசி ஸ்புட்னிக் வி-யைப் போட்டுக்கொண்ட இரண்டு மாதங்களுக்குப் பின்னரே ஆல்பர்டோ பெர்னாண்டஸ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது.
இதையும் படிங்க: கரோனா பரசோதனைக்காக 2000 ஆய்வகங்கள்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்