ETV Bharat / bharat

'நான் தமிழ் மொழியின் அபிமானி' - பிரதமர் மோடி - ஒலிம்பிக் குறித்த பிரதமர் மோடி உரை

'உலகின் பழமையான தமிழ்மொழி, தமிழ் கலாசாரத்தின் அபிமானி நான். தமிழ் மீதான என் அன்பு என்றும் குறையாது' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

author img

By

Published : Jun 27, 2021, 1:59 PM IST

டெல்லி: கடந்த 2014ஆம் ஆண்டு, மோடி பிரதமராக பதவியேற்றது முதல் 'மன் கி பாத்' என்னும் 'மனதில் குரல்' நிகழ்ச்சி வாயிலாக மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி அளவில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அந்த வகையில் இந்த மாதத்திற்கான 'மன் கி பாத்' நிகழ்ச்சி, இன்று(ஜூன் 27) காலை 11 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.

அதில் அவர் கரோனா தொற்று குறித்தும், ஒலிம்பிக் வீரர்கள் குறித்தும் உரையாற்றினார்.

பின் அவர், உலகின் பழமையான மொழி தமிழ்மொழி என்றும்; தான் தமிழ் கலாசாரத்தின் அபிமானி எனவும்; தமிழ் மீதான தன் அன்பு என்றும் குறையாது என்றும் தமிழ் மொழியைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

கரோனா குறித்து பிரதமர் மோடி பேசியதாவது;

"நாங்கள் நாட்டு மக்களை கரோனா தொற்றிலிருந்து மீட்டெடுக்கப் போராடுகிறோம். அதில் நாங்கள் பல அசாதாரண மைல் கல்லை எட்டியுள்ளோம்.

ஜூன் 21 அன்று, புதிய கட்ட தடுப்பூசி இயக்கம் தொடங்கியது. அப்போது ஒரு நாளில் 86 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு இலவச தடுப்பூசிகளை செலுத்தி சாதனைப் படைத்துள்ளோம்.

அனைவரும் தடுப்பூசி தொடர்பான தயக்கத்தை தவிர்த்து, வதந்திகளை புறக்கணித்து, அறிவியலையும், நம் விஞ்ஞானிகளையும் நம்பி தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்.

100 வயது மதிக்கத்தக்க எனது தாய் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். நானும் 2 டோஸ் செலுத்திக்கொண்டேன். ஆகையால், தடுப்பூசி தொடர்பான எந்த ஒரு வதந்தியையும் நம்பாதீர்கள்.

கரோனா தொற்று இன்னும் ஓய்ந்துவிடவில்லை. தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் மட்டுமே நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். தடுப்பூசிகள் தொடர்பாக சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள்.

அதனை நாம் புறக்கணித்து, நமது வேலையை மேற்கொள்ள வேண்டும். ஆகையால் நாம் அனைவரும் தற்போது தடுப்பூசியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

மில்கா சிங்கை மறக்கமுடியுமா?

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர் ஒலிம்பிக் வீரர்கள் குறித்தும் பேசினார். அதில் பிரதமர் பேசியதாவது, 'ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.

திறமை, அர்ப்பணிப்பு, மனதில் உறுதி, நேர்மை எல்லாம் சேரும்போது ஒரு வீரர் உருவாகிறார்.

மிகச்சிறந்த விளையாட்டு வீரரான மில்கா சிங்கை யாரும் மறந்திருக்க முடியாது. மில்கா சிங்கின் ஒட்டுமொத்த குடும்பமே விளையாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

நமது நாட்டின் பெரும்பாலான வீரர்கள் சிறிய நகரத்தில் இருந்து வருபவர்கள். அவர்களின் கதைகளைக் கேட்டால் வாழ்க்கையில் எத்தனைப் போராட்டங்களை சந்தித்து இருப்பார்கள் என்பது நமக்குப் புரியும்.

டோக்கியோவுக்குச் செல்லும் ஒவ்வொரு வீரர்களும் தமக்காக மட்டுமல்ல, நாட்டிற்காகவும் செல்கிறார்கள். 'மன் கி பாத்தில்' நான் சிலவற்றை மட்டுமே குறிப்பிட முடிந்தது.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை cheer4india என்ற ஹேஷ்டேக் மூலம் ஊக்குவிப்போம்' என்றார்.

இதையும் படிங்க: காசிமேடு சந்தையில் குறைந்த மீன்வரத்து... ஏமாற்றத்துடன் திரும்பிய அசைவப்பிரியர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.