தெலுங்கானா: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்த ராமானுஜர், கருணைக்கடல் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு, ஹைதராபாத் அருகே ஷாம்ஷாபாத் விமான நிலையம் அருகே சுமார் ஆயிரம் கோடி மதிப்பில், 216 அடி உயரத்தில் மிகவும் பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பணிகள், தற்போது 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. உலகிலேயே இரண்டாவது பெரிய சிலையாக இது கருதப்படுகிறது. தாய்லாந்தில் 302 அடி உயரமுள்ள புத்தர் சிலையே, உலகிலேயே மிகப்பெரிய சிலையாக உள்ளது.
இந்தச் சிற்பமானது, மெல்கோட் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் உள்ள ராமானுஜரின் செதுக்கப்பட்ட கல் உருவங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நிர்வாக குழுவில் உள்ள தேவானந்த ராமானுஜா ஜீயர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகரவிளக்கு பூஜை 2022: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகர ஜோதி