"பிரதம மந்திரி விவசாயிகள் உதவித்தொகையின் (PM Kiasn Samman Nidhi Scheme) இரண்டாம் தவணை நாளை(ஆக்.9) வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை மத்தியம் 12.30 மணி அளவில் காணொலி வாயிலாக தொடங்கிவைக்கிறார்.
நாளைய விழாவில் சுமார் 9.75 கோடி விவாசாயிகளுக்கு ரூ.19,500 கோடி மதிப்பிலான நிதியுதவி வழங்கப்படும் எனவும் திட்டத்தை தொடங்கிவைத்தப்பின் பிரதமர் மோடி பயனாளர்களிடம் உரையாற்றவுள்ளார் எனவும் பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் பங்கேற்கவுள்ளார்.
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கும் திட்டமானது பிரதமர் மோடி தலைமையிலான அரசால் தொடங்கப்பட்டது.
இந்தத்தொகை மூன்று தவணையாக நான்கு மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்தத்திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.1.38 லட்சம் கோடி பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏழுமலையானை தரிசித்த துர்கா ஸ்டாலின்!