நல்லாட்சி நாள்
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 96ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாப்படுகிறது. வாஜ்பாயின் பிறந்தநாளை மத்திய அரசு நல்லாட்சி நாளாக அறிவித்து கொண்டாடப்பட்டுவருகிறது.
இந்நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாஜ்பாயின் திருவுருவப்படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்த்தூவி மரியாதை செலுத்துகிறார்.
'அடல் பிஹாரி வாஜ்பாய்'
வாஜ்பாயின் சேவைகளை கௌரவிக்கும் வகையில் மக்களவைச் செயலகத்தால் வெளியிடப்படும் 'அடல் பிஹாரி வாஜ்பாய்' என்ற புத்தகத்தை மோடி வெளியிடுகிறார்.
இந்தப் புத்தகம் வாஜ்பாயின் வாழ்க்கை, படைப்புகளை எடுத்துக்காட்டும் வகையில், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க உரைகள் இடம்பெற்றுள்ளன.
முன்னாள் பிரதமரும், பாஜகவின் நிறுவனத் தலைவருமான வாஜ்பாயின் பொது வாழ்க்கையிலிருந்து சில அரிய புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
தைரியமான சீர்த்திருத்தங்கள்
வாஜ்பாய் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரதமராகவும், நாட்டிற்காக எண்ணற்ற முக்கியமான பங்களிப்பை அளித்துள்ளார். அவர் மேற்கொண்ட தைரியமான சீர்த்திருத்தங்கள் நாட்டின் வலுவான பொருளாதாரத்திற்கு வழிவகுத்தது.
பாரத ரத்னா
வாஜ்பாய்க்கு 2015ஆம் ஆண்டில் நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. 1994ஆம் ஆண்டில் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான கோவிந்த் பல்லப் பந்த் விருது அவருக்கு அளிக்கப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் டிசம்பர் 25, 1924இல் பிறந்த வாஜ்பாய், ஆகஸ்ட் 16, 2018 அன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.
இதையும் படிங்க: முகலாயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பரத்பூரின் மகாராஜா சூரஜ்மால்