டெல்லி, புத்தரின் பிறந்தநாளான வைஷாக புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை நேபாளத்தில் உள்ள லும்பினிக்கு பயணம் மேற்கொண்டு லும்பினி மடாலயத்தில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான தனித்துவ மையம் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் லும்பினியில் உள்ள புனித மாயாதேவி கோவிலுக்கு பிரதமர் சென்று பிரார்த்தனை செய்வார் எனவும், நேபாள அரசின் கீழ் இயங்கும் லும்பினி டெவலப்மென்ட் அறக்கட்டளை ஏற்பாடு செய்த புத்த ஜெயந்தி விழாவிலும் பிரதமர் உரையாற்றுவர் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும், கெளரவ விருந்தினராக கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டியும் கலந்து கொள்கின்றனர். கலாசாரத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பௌத்த கூட்டமைப்பு - அதன் தலைமையகத்தை டெல்லியில் நிறுவி 2013 ஆம் ஆண்டு சர்வதேச பௌத்த குடை அமைப்பாக உருவாக்கப்பட்டது. இது உச்ச பௌத்த மதப்படிநிலையின் ஆதரவின் கீழ் நிறுவப்பட்ட பெருமையைப் பெற்றுள்ளது.
பிரதமரின் வருகையும், லும்பினி மடாலய வளாகத்திற்குள் இந்திய மையத்தை கட்டுவதும், பௌத்த பாரம்பரியம் மற்றும் மரபு மூலம் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் என சர்வதேச பௌத்த கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசியலில் யார் தான் புனிதர்... கே.என்.நேரு பேச்சு !