டெல்லி : முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இன்று (டிச.8) அதிகாலை 10.30 மணியளவில் குன்னூருக்கு மிக் 17வி5 (IAF Mi-17V5) ரக ராணுவ ஹெலிகாப்டரில் சென்றார்.
இந்தக் ஹெலிகாப்டரில் அவரது மனைவி உள்பட 14 பேர் பயணித்தனர். இந்நிலையில், ஹெலிகாப்டரானது குன்னூர் மலைப் பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 5 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் உயர் அலுவலர்களுடன் மாலை 6 மணிக்கு ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மும்பை நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்புகிறார்.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் குடும்பத்துடன் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : Bipin Rawat Helicopter Crash Updates: முப்படைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து!