டெல்லி: உலக தலைவர்கள் கலந்துகொள்ளும் ஐரோப்பாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மற்றும் ஸ்டாட் அப் நிகழ்வான விவாடெக்கில் பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 16ஆம் தேதி மாலை 4 மணிக்கு உரை நிகழ்த்துகிறார்.
இந்த நிகழ்வுகள் 2016ஆம் ஆண்டு முதல் பாரிஸில் நடைபெற்றுவருகின்றன. இதில் சிறப்பு விருந்தினராக பங்கெடுத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார். இந்தத் தகவலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இவர் தவிர பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்சிஸ் மற்றும் ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் எம்பிகள் உரையாற்றுகின்றனர்.
மேலும் பேஸ்புக் சமூக வலைதள நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்டோரும் கலந்துகொள்கின்றனர்.