ETV Bharat / bharat

நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் முக்கியத்துவம் வாய்ந்தது - பிரதமர் மோடி - நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி

நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நிதி ஆயோக்கின் 7ஆவது கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Etv Bharatpm-modi-speech-on-niti-aayog-meeting-in-delhi

author img

By

Published : Aug 7, 2022, 8:07 PM IST

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நிதி ஆயோக்கின் 7ஆவது கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். கரோனா தொற்றுநோய்க்கு பிறகு நடந்த முதல் நேரடி கூட்டம் இதுவாகும். 2021ஆம் ஆண்டு கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் 23 முதலமைச்சர்கள், 3 துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த நிர்வாககுழுவில் நான்கு முக்கிய நிகழ்ச்சி நிரல்கள் இடம்பெற்றன. அவை பின்வருமாறு.

(i) பயிரை பல்வகைப்படுத்துதல் மற்றும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் இதர விவசாயப் பொருட்களில் தன்னிறைவை அடைதல்;

(ii) பள்ளிக் கல்வியில் தேசிய கல்விக் கொள்கையை (NEP) செயல்படுத்துதல்;

(iii) உயர்கல்வியில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துதல்

(iv) நகர்ப்புற நிர்வாக மேம்பாடு.

நிதி ஆயோக் கூட்டம் 2022

இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “ஒவ்வொரு மாநிலமும் அதன் வலிமைக்கு ஏற்ப பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு முக்கிய பங்களித்தன. இது வளரும் நாடுகளுக்கு உலகத் தலைவராக இந்தியாவை முன்னோடியாகக் காட்ட வழிவகுத்தது. கரோனா நெருக்கடியில் நாட்டின் கூட்டாட்சி அமைப்பு உலகிற்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தது.

இதற்கான பெருமை மாநில அரசுகளுக்கே உரியது. அரசியல் ரீதியாக ஒத்துழைப்பதன் மூலம் மக்களுக்கு பொது சேவைகளை அடிமட்ட அளவில் வழங்குவதில் கவனம் செலுத்த முடிகிறது. நாட்டின் 75 ஆண்டுகால சுதந்திரத்தில் முதல்முறையாக, இந்தியாவின் அனைத்து தலைமைச் செயலாளர்களும் ஒரே இடத்தில் ஒன்று கூடி, மூன்று நாட்களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை விவாதித்தனர்.

இந்த கூட்டு செயல்முறை இந்த கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்க வழிவகுத்தது. நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் யூனியன் பிரதேசமும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உலகுக்குக் காட்ட இது ஒரு தனித்துவமான வாய்ப்பு. ஒவ்வொரு மாநிலமும் வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

இறக்குமதியைக் குறைத்தல், ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் வாய்ப்புகளை அடையாளம் காண்பதில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் முடிந்தவரை உள்ளூர் பொருட்களை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்க வேண்டும். ஜிஎஸ்டி வருவாய் மேம்பட்டிருந்தாலும், நமது திறன் கூடுதலாக உள்ளது.

ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை. நமது பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்கும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கும் இது மிகவும் முக்கியமானது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கான தேசிய முன்னுரிமைகளை வரையறுக்கும். இன்று நாம் விதைக்கும் விதைகளின் பலன்கள் 2047-இல் அறுவடை செய்யப்படும்" என்றார்.

இதையும் படிங்க: சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.