கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் தவித்துவரும் நிலையில் இந்தியாவில் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உதவிவரும் நிலையில், அண்டை நாடுகளும் இந்தியாவுக்கு இயன்ற உதவிகளை அளித்து வருகின்றன.
அந்த வகையில், இந்தியாவின் முக்கிய அண்டை நாடான பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது, கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போரில் பூடான் இந்தியாவின் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளும் பாரம்பரியமான உறவு கொண்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, இந்த இக்கட்டான சூழல் உறவை மேலும் பலமாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். பூடான் அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த பிரதமர் அந்நாட்டு அரசர் நம்கயால் குறித்தும் நலம் விசாரித்தார்.