சென்னை: தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்த்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதில், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர் என 27 ஆயிரத்து 3 பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது. மேலும், 28 மாவட்டத்திற்கு காலியாக இருந்த 789 பதவி இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 12ஆம் தேதி வெளியானது.
இதில் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. மேலும், 8 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 41 கிராம ஊராட்சித் தலைவர் உட்பட பாஜகவைச் சேர்ந்த 381 பேர் வெற்றி பெற்றனர்.
-
தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி.
— Narendra Modi (@narendramodi) October 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம். https://t.co/xJNjD0A12O
">தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி.
— Narendra Modi (@narendramodi) October 20, 2021
அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம். https://t.co/xJNjD0A12Oதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி.
— Narendra Modi (@narendramodi) October 20, 2021
அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம். https://t.co/xJNjD0A12O
இந்நிலையில், பிரதமர் மோடி வெற்றி பெற்றவர்களை வாழ்த்த விரும்புவதாக ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து உழைப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்பு!