ETV Bharat / bharat

ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு : பிரதமர் மோடி கூறியது என்ன? - PM MOdi

மக்களுக்கு தேவையான உணவு, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் முயற்சியில் வளரும் நாடுகள் தாங்க முடியாத கடன்களால் போராடி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
author img

By

Published : Mar 2, 2023, 2:19 PM IST

டெல்லி: நடப்பு ஆண்டுக்கான ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா பொறுப்பேற்று நடத்துகிறது. முன்னதாக வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜி20 மாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் டெல்லி ராஷ்ட்ரபதி பவன் கலாசார மையத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பிரதிநிகள் கலந்து கொண்டனர். முதல் கட்ட கூட்டத்தில் உணவு, மற்றும் எரிசக்தி தொடர்பாக உலக நாடுகள் எதிர்கொள்ளும் பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்து அலோசிக்க திட்டமிடப்பட்டது. மேலும் இரண்டாம் கட்ட மாநாட்டில் உலகளாவிய தீவிரவாத மற்றும் போதைப் பொருள் அச்சுறுத்தல், உலகளாவிய திறன் மேம்பாட்டில் கவனம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் டெல்லி ராஷ்டிரபதி பவனின் கலாசார மையத்தில் நடந்த வெளியுறவு அமைச்சர்கள் கூட்ட நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "உலகளவில் பன்முகத்தன்மை கடும் நெருக்கடியில் உள்ளதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகளாவிய நிர்வாகத் திறன் தோல்வியை சந்தித்து உள்ளதாகவும் கூறினார்.

மேலும் எந்த குழுவும் அதன் முடிவுகளால் ஏற்பட்டுள்ள தாக்கங்களை கேட்காமல் உலகளாவிய நிர்வாகத் தன்மையை கோர முடியாது என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் மக்களுக்கு தேவையான உணவு, எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் முயற்சியில் வளரும் நாடுகள் தாங்க முடியாத அளவிலான கடன்களால் திணறி வருவதாக அவர் கூறினார்.

மேலும் வளர்ந்த மற்றும் பணக்கார நாடுகளால் ஏற்படும் புவி வெப்பமயமாதலில் அந்த நாடுகளும் பாதிக்கப்படுவதாக பிரதமர் மோடி கூறினார். இந்த காரணங்களுக்காகத் தான் ஜி20 தலைமையில் உலகளாவிய தெற்குக்கு இந்தியா குரல் கொடுக்க முயன்றதாக கூறினார். மேலும் வளர்ச்சி, பொருளாதார பின்னடைவு, நிதி ஸ்திரத்தன்மை, ஊழல், பயங்கரவாதம், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு போன்ற சவால்களை எளிதாக்க ஜி20 நாடுகளை உலகம் எதிர்நோக்குவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற கருத்தை நடப்பு ஜி20 மாநாட்டிற்கான கருப்பொருளாக இந்தியா தேர்வு செய்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார். ஜி20 மாநாட்டிற்கான இந்த கருப்பொருள் நோக்கத்தின் ஒற்றுமை மற்றும் செயலின் ஒற்றுமை ஆகியவற்றை குறிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

பொருளாதார நெருக்கடி, பருவநிலை மாற்றம், பெருந்தொற்று, தீவிரவாதம் மற்றும் போர் உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக உலகளாவிய நிர்வாகத் தன்மை தோல்வியை சந்தித்து வருவதை இது தெளிவாக காட்டுவதாக பிரதமர் மோடி கூறினார். வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை தொடர்ந்து சீன வெளியுறவு அமைச்சர் உள்பட அனைவரையும் பிரதமர் மோடி இன்று மாலை சந்திக்கிறார்.

இதையும் படிங்க: ஜி20 மாநாடு அலங்காரத்திற்கு வைத்த பூந்தொட்டிகளை திருடியவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.