தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், திரிபுரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் தலைநகரங்களில், நடப்பாண்டு ஜனவரி 1ஆம் தேதி 'லைட் ஹவுஸ்' திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் மேற்குறிப்பிடப்பட்ட ஆறு மாநிலங்களில் ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
வீடு கட்டும் திட்டத்திற்காகச் சர்வதேச தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னையில், அமெரிக்கா, பின்லாந்து போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் முன்வார்ப்பு கான்கிரீட் கட்டுமான அமைப்பில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
ஆறு மாநிலங்களிலும் நடைபெற்று வரும் 'லைட் ஹவுஸ்' திட்டத்தை ட்ரோன் மூலம் பிரதமர் இன்று(ஜூலை3) ஆய்வு செய்தார். இத்திட்டத்தின் மூலம் அனைவருக்கும் 12 மாதங்களுக்குள் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்படும்.
இதையும் படிங்க: கலங்கரை விளக்கம் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர்!