டெல்லி: 2023 ஆம் ஆண்டுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 19 ஆம் தேதி முதல் ஹங்கோரி ஃபுடாபெஸ்ட் தேசிய தடகள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டி ஹங்கேரியில் நடக்கும் முதல் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி என்ற பெருமைக்குரியது. உலகளவில் இந்த சாம்பியன்ஷிப் தடகள போட்டிகள் பெரும் மதிப்புமிக்க போட்டியாக கருதப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று(ஆக.26) சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் நடைபெற்ற ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் ஹீட்ஸ் சுற்றில் புதிய வரலாற்றை படைத்து உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறி இந்திய அணி அசத்தியுள்ளது. இந்திய தொடர் ஓட்டத்திற்கு(relay) தேர்வான முகமது அனஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல் மற்றும் ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் இடம்பெற்று இந்த குழுவில், போட்டியில் அவர்களின் அசாத்திய திறனை வெளிப்படுத்தி ஆசிய சாதனையை முறி அடித்துள்ளனர். இதில் ராஜேஷ் ரமேஷ் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
-
Incredible teamwork at the World Athletics Championships!
— Narendra Modi (@narendramodi) August 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Anas, Amoj, Rajesh Ramesh and Muhammed Ajmal sprinted into the finals, setting a new Asian Record in the M 4X400m Relay.
This will be remembered as a triumphant comeback, truly historical for Indian athletics. pic.twitter.com/5pRkmOoIkM
">Incredible teamwork at the World Athletics Championships!
— Narendra Modi (@narendramodi) August 27, 2023
Anas, Amoj, Rajesh Ramesh and Muhammed Ajmal sprinted into the finals, setting a new Asian Record in the M 4X400m Relay.
This will be remembered as a triumphant comeback, truly historical for Indian athletics. pic.twitter.com/5pRkmOoIkMIncredible teamwork at the World Athletics Championships!
— Narendra Modi (@narendramodi) August 27, 2023
Anas, Amoj, Rajesh Ramesh and Muhammed Ajmal sprinted into the finals, setting a new Asian Record in the M 4X400m Relay.
This will be remembered as a triumphant comeback, truly historical for Indian athletics. pic.twitter.com/5pRkmOoIkM
போட்டியின் தொடக்கத்தில், முதலில் தொடங்கிய முகமது அனஸின் வேகம் பின்னோக்கியே இருந்தது. பின்னர் இரண்டாம் இடத்தில் அமோஜ் ஜேக்கப்பிடம் ரிலே பட்டன் கைமாறிய போது தன் வேகத்தை அதிகரித்து ஆறாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முந்தி மற்ற நாடுகளை பின் தள்ளினார். அதனைத் தொடர்ந்து பட்டனை கைபற்றிய முகமது தொடர்ந்து இரண்டாவது இடத்திலேயே நீடித்து மற்ற வீரர்களுக்கு டஃப் கொடுத்தார். இறுதியில் ரமேஷ் இரண்டாம் நிலையில் போட்டியை 2 நிமிடங்கள் 59 விநாடிகளில் புதிய ஆசிய சாதனையுடன் நிறைவு செய்தார். உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய ஆண்கள் அணி முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.
இதனைத் தொடர்ந்து 2 நிமிடங்கள் 58.47 விநாடிகளுடன் அமெரிக்க அணி தொடர்ந்து முன்னிலை வகுத்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற முகமது அனஸ், நோவா நிர்மல் டாம், ஆரோக்கிய ராஜீவ் மற்றும் அமோஜ் ஜேக்கப் ஆகியோர் 3 நிமிடங்களில் 0.25 விநாடிகளில் நிறைவு செய்து மூன்றாம் இடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கு பெரும் வாய்ப்பினை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
Who saw this coming 😳
— World Athletics (@WorldAthletics) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
India punches its ticket to the men's 4x400m final with a huge Asian record of 2:59.05 👀#WorldAthleticsChamps pic.twitter.com/fZ9lBqoZ4h
">Who saw this coming 😳
— World Athletics (@WorldAthletics) August 26, 2023
India punches its ticket to the men's 4x400m final with a huge Asian record of 2:59.05 👀#WorldAthleticsChamps pic.twitter.com/fZ9lBqoZ4hWho saw this coming 😳
— World Athletics (@WorldAthletics) August 26, 2023
India punches its ticket to the men's 4x400m final with a huge Asian record of 2:59.05 👀#WorldAthleticsChamps pic.twitter.com/fZ9lBqoZ4h
இது குறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில், "உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அவர்களின் அசாத்திய திறனை வெளிப்படுத்தி இந்தியாவை இறுதிகட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்ற முகமது அனஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல் மற்றும் ராஜேஷ் ரமேஷ் ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள். இந்த வரலாற்று சாதனை இந்திய தடகளத்தில் அழியா புகழாக நீடித்து இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி நாளான இன்று(ஆக.27) இறுதி போட்டிக்கு, ஈட்டி எரிதலில், கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் 4x400 மீ தொடர ஓட்டத்தில் ஆண்களின் அணி பங்கேற்க உள்ள நிலையில், வெற்றியை தன்வசப்படுத்துமா இந்தியா என அனைவரது புருவத்தையும் உயர்த்தி எதிர் பார்க்கச் செய்துள்ளது.
இதையும் படிங்க: நீரஜ் சோப்ராவுடன் போட்டி மனப்பான்மையா? - மனம் திறந்த பாகிஸ்தான் வீரர்!