டெல்லி: தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி நவம்பர் 11ஆம் தேதி காலை 10.20 மணி அளவில் பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் பாரத் கவ்ரவ் கஷி தர்ஷன் ரயில் போக்குவரத்தை கொடியசைத்துத் துவக்கி வைக்க உள்ளார். அதன்பின் நண்பகல் 12 மணி அளவில், கெம்பேகவுடாவின் 108 அடி உயரம் உள்ள வெண்கலச் சிலையை திறந்துவைக்க உள்ளார்.
அன்று மாலை 3.30 மணி அளவில் தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல்லில் அமைந்துள்ள காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்ற உள்ளார். நவம்பர் 12ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கி வைக்க உள்ளார்.
மாலை 3.30 மணி அளவில் தெலங்கானா ராமகுண்டத்தில் உள்ள ஆர்எஃப்சிஎல் ஆலைக்கு செல்லவுள்ளார். அதன் பின் 4.15 மணி அளவில் ராமகுண்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைக்க உள்ளார். அந்த வகையில் கர்நாடகாவில் ரூ.5,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும், ஆந்திரப்பிரதேசத்தில் ரூ.10,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும், தெலங்கானாவில் ரூ.9,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கியும் வைக்கிறார்.
இதையும் படிங்க: 'இந்து' என்ற சொல் குறித்த சர்ச்சை கருத்தை திரும்பப்பெற்றார் சதீஷ் ஜார்கிஹோலி