டெல்லி: மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் என நாட்டின் முக்கிய நகரங்கள் உள்பட நாடு முழுக்க கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இதனால், வார இறுதி ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, கேளிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் எனத் தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முயன்று வருகின்றன.
இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 1 லட்சத்து 59 ஆயிரத்து 632 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, 327 பேர் உயிரிழந்துள்ளனர். உருமாறிய கரோனா தொற்றான ஒமைக்ரான் தொற்று, இந்தியாவில் கடந்த 24 நேரத்தில் 3 ஆயிரத்து 623 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நாட்டின் கரோனா பரவல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உயர் அலுவலர்கள் உடன் இன்று (ஜன.9) மாலை 4.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
இதனால், மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதா போன்ற கேள்விகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒன்றரை லட்சத்தை கடந்தது தொற்று பாதிப்பு; 327 பேர் உயிரிழப்பு