மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்வில் உரையாற்றுவது வழக்கம். இந்த மாதத்தின் மனதின் குரல் நிகழ்வில் இன்று உரையாற்றிய மோடி, கடந்தாண்டு இதே காலகட்டத்தில் மக்கள் அனைவரும் கோவிட்-19 உறுதித்தன்மையுடன் எதிர்கொள்ளத் தொடங்கினார்கள்.
குறிப்பாக மக்கள் ஊரடங்கு மூலம் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நின்றனர். தற்போது கோவிட்-19 எதிரான போரில் இறுதி கட்டத்தை அடைந்து உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா மேற்கொண்டுவருகிறது. எனவே நாட்டு மக்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்திலும் முழுமையாக பங்கேற்று கோவிட்-19 எதிரான போரில் வெற்றி கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆந்திர எம்எல்ஏ குந்தோதி வெங்கட சுப்பையா காலமானார்!