உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முனைப்புடன் செயல்பட்டுவரும் நிலையில், அங்கு நடைபெற்ற நலத்திட்ட தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அம்மாநிலத்தின் மஹோபா என்ற பகுதியில் ரூ.3,240 கோடி மதிப்பிலான மக்கள் நலத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் மஹோபா, ஹமிர்பூர், பந்தா, லலித்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 65 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்களுக்கு பாசன வசதிகள் மேம்படும்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, "கடந்த ஏழு ஆண்டுகளில் டெல்லியிலிருந்து நாட்டின் மூலை முடுக்கெங்கும் வளர்ச்சியை கொண்டு சேர்த்துள்ளது. இது, நாட்டின் மிகப்பெரிய இலவச எரிவாயு மானியத் திட்டமான உஜ்வாலாத் திட்டம் தொடங்கப்பட்டது.
இங்குதான் நான் இஸ்லாமியப் பெண்களிடம் அவர்களை முத்தலாக் சட்டத்திலிருந்து விடுதலைத் தருவேன் என உறுதியளித்தேன். அந்த உறுதி மொழியையும் காத்தேன். விவசாயிகள், ஏழை எளிய மக்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான முன்னேற்றத்தை பாஜக அரசு வழங்கும்" என உறுதியளித்தார்.
இதையும் படிங்க: மருத்துவம் இந்தியா வெற்றி பெற வேண்டிய துறை - பிரதமர் மோடி