ETV Bharat / bharat

திறமையான பணியாளர்களை வழங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா மாறும் - பிரதமர் மோடி - ரோபாட்டிக்ஸ்

இந்தூரில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தில், ஜி 20 நாடுகளின் வேலைவாய்ப்பு பணிக்குழு கூட்டத்தை நடத்துவது இந்தியாவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

'திறமையான பணியாளர்களை வழங்கும் மிகப்பெரிய நாடாக இந்தியா மாற வாய்ப்பு'- பிரதமர் மோடி பெருமிதம்!

author img

By

Published : Jul 21, 2023, 2:21 PM IST

இந்தூர்: மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்கள் கூட்டத்தில், இன்று (ஜூலை 21) பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். தொழில்நுட்பம், வேலைவாய்ப்பின் முக்கிய உந்துதலாக மாறிவிட்டதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஒரே இடத்தில் நிலையாக இல்லாமல் நாம் பணியாற்றும் இடம் மாறும் அமைப்பு, எதிர்காலத்தில் உண்மையாகவே நிகழ்ப்போகிறது. மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளைப் பயன்படுத்துவதில் நாம் அனைவரும் நமது பணியாளர்களை திறமைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இந்தியாவின் இந்தூர் நகரில் ஜி20 மாநாடு நடைபெறுவது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர் மோடி, தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தின்போது அதிக எண்ணிக்கையிலான தொழில்நுட்ப வேலைகளை உருவாக்கிய அனுபவத்தைப் பெற்ற நாட்டில் இந்த சந்திப்பு நடைபெறுவது அதிர்ஷ்டம் என்றும், இந்தூர் நகரம் இத்தகைய மாற்றங்களின் வழியாக புதிய அலையை வழிநடத்தும் பல ஸ்டார்ட்-அப்களின் தாயகமாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

"திறன், மறுதிறன் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவையே எதிர்காலத்தில் பணியாளர்களுக்கான மந்திரங்களாக விளங்க உள்ளன. இந்தியாவில் திறன் இந்தியா திட்டம் இந்த யதார்த்தத்துடன் இணைக்கும் ஒரு பிரச்சாரம் ஆகும். பிரதமர் கௌசல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், இதுவரை 12.5 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. செயற்கை நுண்ணறிவு, ரோபாடிக்ஸ், இணையதளம் சார்ந்த சேவைகள் மற்றும் ட்ரோன்கள் உள்ளிட்ட 4.0 வகை தொழில் துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

திறன்களின் மேம்பாடு மற்றும் பகிர்வு ஆகியவற்றை உலகமயமாக்குவதற்கான சரியான நேரம் இதுதான்” என கூறினார். மேலும், சர்வதேச ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, இடம் பெயர்வு மற்றும் இயக்க கூட்டாண்மை ஆகியவற்றின் புதிய மாதிரிகள் தேவைப்படுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டு உள்ளார்.

வேலை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்கள் தொடர்பான புள்ளி விவரத் தகவல்கள் மற்றும் தரவைப் பகிர்வது என்பது புதிய தொடக்கத்திற்கான சிறந்த வழியாகும். இது உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு சிறந்த திறன், தொழிலாளர் திட்டமிடல் மற்றும் முழு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான ஆதார அடிப்படையிலான கொள்கைகளை உருவாக்க அதிகாரம் அளிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கு: எதிர்மனுதாரர் 2 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.