புது டெல்லி : நாடு முழுக்க இன்று (ஏப்.2) வசந்த நவராத்திரி, உகாதி மற்றும் விக்ரம் சம்வத் உள்ளிட்ட பண்டிகைகள் கொண்டாடப்பட்டுவருகின்றன.
தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் உகாதியை புதிய ஆண்டாக கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “நாட்டு மக்களுக்கு இனிய நவராத்திரி வாழ்த்துகள். இந்தச் சக்தி வழிபாடு அனைவரின் வாழ்விலும் புத்துயிர் அளிக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
-
Best wishes on the special occasion of Ugadi. pic.twitter.com/1aAeMDARsg
— Narendra Modi (@narendramodi) April 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Best wishes on the special occasion of Ugadi. pic.twitter.com/1aAeMDARsg
— Narendra Modi (@narendramodi) April 2, 2022Best wishes on the special occasion of Ugadi. pic.twitter.com/1aAeMDARsg
— Narendra Modi (@narendramodi) April 2, 2022
தொடர்ந்து மற்றொரு ட்வீட்டில், “விக்ரம் சம்வத், உகாதி, சேதி சந்த், சஜிபு செய்ரோபா, நெவ்ரா, குடி பட்வா” உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகளும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சைத்ரா நவராத்திரி அல்லது வசந்த நவராத்திரியின் தொடக்க நாளான இன்று ஜம்மு காஷ்மீர் கட்ராவில் உள்ள மாதா வைஷ்ணவி ஆலயம், டெல்லி ஜன்தேவாலன் கோயில், வாரணாசி துர்கா கோயில் மற்றும் மும்பை மும்பா தேவி ஆலயம் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
இந்தாண்டு சைத்ரா நவராத்திரி ஏப்.2ஆம் தேதி தொடங்கி ஏப்.11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையும் படிங்க : திருப்பதியில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசனம்!