மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர்-பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை, நாக்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். முன்னதாக பிரதமர் மோடி, வந்தே பாரத் விரைவு ரயிலின் பெட்டிகள், பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் ஆய்வு செய்தார்.
-
Flagged off the Vande Bharat Express between Nagpur and Bilaspur. Connectivity will be significantly enhanced by this train. pic.twitter.com/iqPZqXE4Mi
— Narendra Modi (@narendramodi) December 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Flagged off the Vande Bharat Express between Nagpur and Bilaspur. Connectivity will be significantly enhanced by this train. pic.twitter.com/iqPZqXE4Mi
— Narendra Modi (@narendramodi) December 11, 2022Flagged off the Vande Bharat Express between Nagpur and Bilaspur. Connectivity will be significantly enhanced by this train. pic.twitter.com/iqPZqXE4Mi
— Narendra Modi (@narendramodi) December 11, 2022
அதோடு வந்தே பாரத் விரைவு ரயிலின் கட்டுப்பாட்டு மையத்திலும் ஆய்வு மேற்கொண்டு நாக்பூர் மற்றும் அஜ்னி ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகளையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், நாக்பூர்-பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் ரயில்வே இணைப்பு கணிசமாக அதிகரிக்கும் எனப் பதிவிட்டுள்ளார். இந்த புதிய ரயில்சேவை மூலம் நாக்பூர்-பிலாஸ்பூர் இடையேயான பயண நேரம், 7-8 மணி நேரத்தில் இருந்து 5 மணி 30 நிமிடங்களாகக் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மோடி அணிந்த 'காரகுலி' தொப்பி பற்றி தெரியுமா..?