டெல்லி: சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டளது. நாட்டின் பெருமை மிக்க இந்த தருணத்தில் இஸ்ரோ மற்றும் அங்கு பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து தனது 'X' ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
-
Successful launch of #Chandrayaan3
— Narendra Modi For New India (@NaMo4PM) July 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congratulations to @isro and our scientists.
Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳 #NewIndia pic.twitter.com/ISlZMaT2CW
">Successful launch of #Chandrayaan3
— Narendra Modi For New India (@NaMo4PM) July 14, 2023
Congratulations to @isro and our scientists.
Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳 #NewIndia pic.twitter.com/ISlZMaT2CWSuccessful launch of #Chandrayaan3
— Narendra Modi For New India (@NaMo4PM) July 14, 2023
Congratulations to @isro and our scientists.
Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳 #NewIndia pic.twitter.com/ISlZMaT2CW
அதில், " மனித குலத்தின் நலனுக்காகவும், பிரபஞ்சம் தொடர்பான சிறந்த புரிதலை வளர்க்கும் நோக்கத்திலும் எங்களின் அயராத அறிவியல் தேடல் தொடரும்" எனக் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில்தான் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு நிலவின் தென் துருவத்தில் அதன் ஆய்வு பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான தகவல்களையும் இஸ்ரோ தொடர்ந்து வழங்கி வருகிறது.
இதன் தொடர்சியாக 15 ஆண்டுகால கனவு, முயற்ச்சி, தேடல் என்றெல்லாம் குறிப்பிடும் வகையில் உள்ள ஆதித்யா எல் -1 திட்டம் இன்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (செப்,2) காலை சரியாக 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்ணில் ஏவப்பட்டது. இந்தியா மட்டும் இன்றி உலக நாடுகளே உற்று நோக்கிய இந்த நிகழ்வு இந்திய மக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: Somnath : பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்1 வெற்றிகரமாக பிரிந்தது - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!
இதற்கு நாட்டின் முக்கிய தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி இஸ்ரோ நிறுவனம் மற்றும் அங்கு பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் 'X' பதிவு வெளியிட்டுள்ளார். அதில் " இஸ்ரோவில் உள்ள நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்து" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவரை தொடர்ந்து இஸ்ரோ மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இது குறித்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் பயணம் ஆதித்யா எல்-1. இது உள்நாட்டு விண்வெளி ஆய்வு மற்றும் திட்டத்தில் புதிய பாதையை உருவாக்கும் மிகப்பெரிய சாதனை. அது மட்டும் இன்றி மனித குலம் விண்வெளி மற்றும் பிரபஞ்ச நிகழ்வுகளை நன்கு புரிந்துகொள்ள உதவும். இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துகள். இந்த சாதனை முயற்சி முழுமையான வெற்றிபெற வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
The launch of Aditya-L1, India's first solar mission, is a landmark achievement that takes India’s indigenous space programme to a new trajectory. It will help us better understand space and celestial phenomena. I congratulate the scientists and engineers at @isro for this…
— President of India (@rashtrapatibhvn) September 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The launch of Aditya-L1, India's first solar mission, is a landmark achievement that takes India’s indigenous space programme to a new trajectory. It will help us better understand space and celestial phenomena. I congratulate the scientists and engineers at @isro for this…
— President of India (@rashtrapatibhvn) September 2, 2023The launch of Aditya-L1, India's first solar mission, is a landmark achievement that takes India’s indigenous space programme to a new trajectory. It will help us better understand space and celestial phenomena. I congratulate the scientists and engineers at @isro for this…
— President of India (@rashtrapatibhvn) September 2, 2023
நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்ந்ததை உணர்வுப்பூர்வமான நிகழ்வாக கொண்டாடி வரும் நிலையில் தங்கள் சமூகவலைதளப் பக்கங்களில் பதிவுகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Aditya L1 Launch: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்1!