கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மாநில விவசாயிகளுக்கான பிரதமர் கிசான் திட்டத்தை செயல்படுத்த சில நாள்களுக்கு முன்பு ஒப்புதல் தெரிவித்தார். தொடர்ந்து, இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசின் இணையதளத்தில் தங்களை பதிவு செய்த அனைவரின் விவரங்களையும் தெரிவிக்குமாறு மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் கேட்டிருந்தார்.
இதையடுத்து, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மம்தா பானர்ஜிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்களுக்கு மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ 6,000 வருமான உதவி வழங்கப்படுகிறது. இதற்காக மேற்கு வங்க மாநில அரசு சேமிப்புக் கணக்குகளைத் மக்கள் தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த திட்டத்தால் மாநிலத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள். எனவே, இந்தத் திட்டத்தை மத்திய அரசு சிறப்பு அலுவலருடன் ஒருங்கிணைத்து அதை சீராக செயல்படுத்தும் என்றார்.
முன்னதாக, தனது அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகளுக்கு மேலாக, மத்திய அரசிடமிருந்து விவசாயிகள் அனைத்து உதவிகளையும் பெற விரும்புகிறேன். பணத்தை நேரடியாக விவசாயிகளுக்கு அனுப்பினால் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றார். இவர் இந்த திட்டத்திற்கான நிதி மாநிலத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் கோரிக்கையை தளர்த்தி இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
இதையும் படிங்க: 'தகுதியற்ற பயனாளிகள் பணத்தை திருப்பிச் செலுத்த தவறினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்'