அசோச்சம் (Assocham) அமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பொருளாதார விவகாரங்கள் துறைக்கான ஆலோசகர் மனிஷா சென்சர்மா பங்கேற்று உரையாற்றினார். அதில், பிரதமர் ஜன்தன் வங்கிக்கணக்குத் திட்டம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார்.
அவர் பேசுகையில், 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜன்தன் வங்கிக்கணக்குத் திட்டம், ஏழு ஆண்டுகளில் 44 கோடி பயனாளர்கள் என்ற இலக்கை எட்டியுள்ளது. இந்த திட்டம் மூலம் சாதாரண மக்களுக்கும் ஒருங்கிணைந்த வங்கிக் கணக்கில் சேர்ந்துள்ளனர்.
இவர்களின் கணக்குடன் ஆதார், மொபைல் நம்பர்களுடன் இணைக்கப்பட்டு, சமூக நலத் திட்டங்கள் பயனாளர்களுக்கு முறையாக வழங்கப்பட்டுவருகின்றன. இதன்மூலம் அரசின் திட்டங்கள் ஊழலின்றி வழங்கப்பட்டுவருகின்றது.
இதையும் படிங்க: யோகி அரசை கண்டித்த பாஜக எம்பி வருண் காந்தி