சமூக இணைப்பை ஆழப்படுத்தும் அருமையான ஊடகமாக வானொலி திகழ்கிறது என்று உலக வானொலி தினத்தை முன்னிட்டு அனைத்து வானொலி நேயர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில், “ இனிய உலக வானொலி தின வாழ்த்துகள்! அனைத்து வானொலி நேயர்களுக்கும் வாழ்த்துகள், புதுமையான படைப்புகள், இசையால் வானொலியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். இது, சமூக இணைப்பை ஆழப்படுத்துவதற்கான ஓர் அருமையான ஊடகமாகும். தனிப்பட்ட முறையில், மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக வானொலியின் நேர்மறையான தாக்கத்தை நான் உணர்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:
நாடு முழுவதும் இதுவரை 80 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள்!