ETV Bharat / bharat

'பிளேபாய்' வேலைக்கு ஆட்கள் தேவை - சர்ச்சைக்குரிய போஸ்டர்களால் பரபரப்பு!

author img

By

Published : Aug 2, 2023, 12:36 PM IST

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 'பிளேபாய்' வேலைக்கு ஆட்கள் தேவை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது வேலை தேடும் இளைஞர்களிடம் மோசடி செய்யும் முயற்சியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

police
பிளே பாய் வேலை

உத்தரகாண்ட்: நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வேலையில்லாத் திண்டாட்டம் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு வேலையின்மையின் விகிதம் அதிகரித்துவிட்டது. இந்த சூழலில் வேலை தேடி சோர்ந்துபோன இளைஞர்கள் தவறான வழிகளில் பணம் சம்பாதிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. அதேபோல், வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து மோசடி செய்யும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூனில், வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 'பிளேபாய்' (Playboy jobs) வேலைக்கு ஆட்கள் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது. டேராடூன் நகரின் பல்வேறு பகுதிகளில் சுவர்கள் மற்றும் மின்கம்பங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், "பிளேபாய் வேலைக்கு ஆட்கள் தேவை. நாள் ஒன்றுக்கு ஊதியமாக 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வழங்கப்படும். பயணப்படி மற்றும் உணவு வழங்கப்படும். வேலையில் சேர விரும்புவோர் பதிவுக் கட்டணமாக 2,000 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். பதிவுக் கட்டணம் செலுத்துவதற்கான QR குறியீடு வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும். கட்டணம் செலுத்தியபின் வேலையில் சேரவில்லை என்றால், கட்டணம் திருப்பித் தரப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேலை தேடும் இளைஞர்களை கவரும் வகையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தகவலறிந்த போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த வேலை விளம்பரத்தில் பணியில் சேர விரும்புவோர் பதிவுக் கட்டணமாக இரண்டாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், கட்டணம் செலுத்துவதற்கான QR குறியீடும் அனுப்பப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதால், இது மோசடிக்காரர்களின் வேலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பாக டேராடூன் காவல் கண்காணிப்பாளர் சரிதா தோவல் கூறுகையில், "இந்த போஸ்டர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போஸ்டர்களில் விளம்பரப்படுத்தப்பட்ட செல்போன் எண்கள், க்யூஆர் குறியீடுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய மோசடி ஆசாமிகள் விரைவில் பிடிபடுவார்கள்" என்றார்.

முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் டேராடூனில் இதேபோல், பிளேபாய் வேலைக்கு ஆட்கள் தேவை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இதையும் படிங்க: நடுவானில் விமானத்தில் புகை பிடித்த பயணி கைது.. சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.