பாஜகவின் புதிய மாநிலங்களவைத் தலைவராக ஒன்றிய வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்த நியமனம் வெளியாகியுள்ளது.
இதுவரை பொறுப்பிலிருந்த தாவர்சந்த் கெலாட், கர்நாடாக மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், பியூஷ் கோயலுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள பியூஷ் கோயலுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு முதல்முறை மாநிலங்களவை உறுப்பினரான பியூஷ் கோயல், நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம், ஜவுளித்துறை ஆகிய இலாக்காக்களை தன்னகத்தே கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு