டெல்லி: உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டின் 3ஆவது பதிப்பில், மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார். அப்போது அவர், செயற்கை நுண்ணறிவு, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பெரும் ஊக்குவிப்பாக அமையும், 2047 ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டுமென்ற இலக்கை அடைய உதவும்.
நமது நாட்டின் உற்பத்தி திட்டங்களுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணைந்தால், ஒட்டுமொத்த உலகுக்கே உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பம் வழங்கும் தொழிற்சாலையாக இந்தியா மாறும். பல ஆண்டுகளாக, குறிப்பாக கரோனா காலங்களில் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பங்கு உறுதுணையாக இருந்தது. அதேபோல செயற்கை நுண்ணறிவும் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
எதிர்காலத்தில் மக்களின் வாழ்க்கையை எளிமைக்கும் திட்டங்களிலும், பொருளாதார மேம்பாட்டிலும் செயற்கை நுண்ணறிவு முக்கியப் பங்காற்றும். பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, விவசாயம், ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கம் திட்டங்களில் செயற்கை நுண்ணறிவை புகுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: டி-90 பீரங்கியின் குழல் வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு