ETV Bharat / bharat

ஆசையாக வளர்த்தவரை கடித்த செல்லப்பிராணி பிட்புல் - மூதாட்டி உயிரிழப்பு! - மூதாட்டியை கடித்த நாய்

ஆசையாக வளர்த்த செல்லப்பிராணியான பிட்புல் நாய் கடித்ததில், மூதாட்டி உயிரிழந்தார்.

pitbull
pitbull
author img

By

Published : Jul 13, 2022, 9:14 PM IST

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் கெய்சர்பாக்கில், பெங்காலி தோலா பகுதியில் வசித்து வந்த சுசீலா திரிபாதி (82) என்ற மூதாட்டி, செல்லப்பிராணிகளாக இரண்டு நாய்களை வளர்த்து வந்தார். அதில் ஒன்று லாப்ரடோர், மற்றொன்று பிட்புல் இனத்தைச் சேர்ந்தது.

இந்த நிலையில் சுசீலா, மொட்டை மாடியில் நாய்களுடன் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென பிட்புல் அவரை கடித்துள்ளது. அவர் தப்பியோட முயற்சித்தும், பிட்புல் அவரை விரட்டி விரட்டி கடித்துள்ளது. இதில் சுசீலா பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கும் பிறகு அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க:ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி குழந்தைகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.